Connect with us

Cricket

ஐபிஎல் ரிடென்ஷன்: என்ன தல இப்படி சொல்லிட்டாரு? யாருமே எதிர்பார்க்கல!

Published

on

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், ஐபிஎல் அணிகள் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை நாளைக்குள் (வியாழக் கிழமை) சமர்பிக்க வேண்டும். எனினும், கிரிக்கெட் வல்லுநர்கள் தொடங்கி, ரசிகர்கள் மற்றும் பலர் ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்பது தொடர்பாக கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் தரப்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி ஐபிஎல் ரிடென்ஷன் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய எம்.எஸ். டோனி, “தற்போது எல்லோருமே ஐ.பி.எல். அணி உரிமையாளர் தான். அவரவர் என்ன விரும்புகிறார்களோ, எந்த வீரர் ஏலத்திற்கு வந்தாலும், யார்யார் அவரை வாங்க விரும்பினாலும், நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். ஐபிஎல் ஏலம் பல்வேறு மர்ம முறைகளில் தான் வேலை செய்கிறது.”

“வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள், இறுதியில் எந்த அணியில் இணைவோம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். இது குறித்து மிக அற்புதமான விஷயங்கள் ரசிகர்களிடம் இருந்து தான் வரும். அவர்கள் தான் கணிப்புகளை கூறுகின்றனர். அனைத்து அணிகளும் நிறைய ரொக்கம் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் உங்களை சந்தையில் காணலாம்.”

“யார் உங்களை வாங்கினாலும், அவர்களுக்காக நன்றாக விளையாட வேண்டும். இந்த ஒரு உத்தரவாதம் தான் ஐபிஎல் ஏலத்தின் அழகு. இது வெறும் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல, மாறாக ஒரு பெரிய வீரர் மற்றொரு அணிக்காக விளையாடலாம். எங்கு விரும்புகிறோமோ அங்கு விளையாடும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு,” என்று தெரிவித்தார்.

google news