Uncategorized
குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும். இதனால் சில நேரங்களில், சில இடங்களில் சுத்தம், சுகாதார சீர்கேடுகள் உண்டாகி விடும்.
நேற்று நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியது. புத்தாடை அணிந்தும் , இனிப்புகளை மாறி, மாறி வழங்கியும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தங்களது விருப்ப நடிகர்கள் நடித்து வெளியான மற்றும் விருப்பத் தேர்வு திரைப்படங்களையும் தியேட்டர்களுக்கு சென்று ரசித்து பார்த்தும் தங்களது கொண்டாட்டங்களை நடத்தி வந்தனர்.
இது ஒரு புறமிருக்க தீபாவளி பண்டிகை என்றதுமே பிரதானப் படுவது பட்டாசுகள் தான். நேற்றைய தினம் முழுவதும் இந்தப் பட்டாசு சத்தம் பலரின் காதுகளை கிழிக்கும் அளவில் கூட இருந்திருக்கலாம்.
அதே நேரத்தில் இரவு நேரத்தில் வெடிக்கப்பட்ட வண்ண மயமான பட்டாசுகளை கண்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் மனதையும் வருடியிருந்தது.
பட்டாசு வெடிப்பதும் அதனை வேடிக்கை பார்ப்பது ஒரு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. பட்டாசுகள் வெடித்து முடிக்கப் பட்டதும் அதனால் உண்டான குப்பைகளை சென்னை மாநாகராட்சி அப்புறப்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் அகற்றப் பட்ட பட்டாசுக் கழிவுகளின் எடை அளவினையும் சொல்லியிருப்பதாக செய்தியகள் வெளியாகியுள்ளது.
நேற்று அக்டோபர் மாதம் 31ம் தேதி துவங்கி இன்ரு நவம்பர் 1ம் தேதி நண்பகல் 12 மணி வரை 156.48 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப் பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சொல்லியிருப்பதாக பிரபல நியூஸ் சேன்ல் ஒன்று தனது செய்தியில் சொல்லியிருக்கிறது.