இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே இந்திய டெஸ்ட் அணியில் மாற்றங்களுக்கு பெயர் போனவர். 1996-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து பயணம் சென்ற போது ஆறு இளம் வீரர்களை இந்திய அணியில் இவரே மாற்றாக இருந்தவர். அப்போதைய இந்திய அணியில் இடம்பெற்ற ஆறு இளம் வீரர்களில் மாம்ப்ரேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகினர். மாம்ப்ரே ஒரேயொரு ஒன்மோர் டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதன்பிறகு மும்பை கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக உருவெடுத்தார். இவர் தலைமையில் அந்த அணி ஐந்து முறை கோப்பை வென்று அசத்தியது.
ஓய்வுக்கு பின் மாம்ப்ரே பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார். இவர் பயிற்சியளித்த வங்காள உள்ளூர் அணி வெற்றி வாகை சூடி அசத்தியது. அதன்பிறகு இந்தியா ஏ அணி மற்றும் இந்தியா U19 அணிக்கு பயிற்சியளித்தார். மேலும், இவர் ராகுல் டிராவிட் உடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றி இருக்கிறார். அதன்பிறகு தான் ராகுல் டிராவிட் இவரை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தார்.
இவர்களது பணிக்காலத்தில் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அதன்பிறகு தான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அசுர மாற்றத்தை கண்டுள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என முன்னணி வீரர்கள் ஓய்வை அறிவித்த பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முகமது சிராஜ் குறித்து மாம்ப்ரே கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ்-க்கு அவர் அளித்த பேட்டியில் பேசும் போது, “அவரின் செயல்பாடுகளை ஐபிஎல்-இல் மட்டும் பார்க்கக்கூடாது. அவர்கள் சரியான ஆப்ஷன்களை தட்டியுள்ளனர் என்றே நினைக்கிறேன். சரியான ஆப்ஷன்கள் என்றால் அவர்கள் எல்லா போட்டியிலும் விளையாடி உள்ளனர்.”
“பிட்னஸை பொருத்தவரை அது மிகப்பெரிய டிக் ஆகும். அனைவரும் சிறப்பாகவே உள்ளனர். அவர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். சிராஜ் மற்றும் பிரசித் ஆகியோரை பார்க்கும் போது அவர்கள் இதுவரை பந்துவீசிய விதம் திருப்திகரமாக இருந்துள்ளது. அர்ஷ்தீப் பொறுப்புடன் செயல்பட்டுள்ளார். முகமது சிராஜ் இந்த தொடரில் பும்ராவுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.”
“உங்களுக்காக எப்போதும் பும்ரா மட்டுமே எப்போதும் செயல்பட முடியாது. சிராஜ் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு அணிக்கு அந்த பணியை முடித்துக்கொடுக்க வேண்டும். பும்ராவுக்கு அடுத்த நிலையில் மூத்த வீரராக சிராஜ் உள்ளார். பிரசித் இதுவரை குறைந்த எண்ணிக்கையில் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதே நிலையில் தான் ஆகாஷ் தீப் இருக்கிறார். அர்ஷ்தீப் தற்போது தான் தொடங்குகிறார். இதனால் அவர்களுக்கு அழுத்த் கொடுக்கக்கூடாது,” என்று தெரிவித்தார்.