ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன. பிரீமியம் விலை பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கும் இந்த சீரிஸ்-க்கு அவ்வப்போது சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுவது இயல்பு தான். அந்த வரிசையில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு தற்போது சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகைகள் ப்ளிப்கார்ட் தளத்தில் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி மட்டுமின்றி இரு மாடல்களுக்கும் தள்ளுபடி, வங்கி சலுகைகள் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து ஐபோன் 16 ப்ரோ அல்லது ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வாங்கும் வசதி வழங்கப்படுகிறது.
சலுகை விவரங்கள்:
ஐபோன் 16 ப்ரோ மாடல் இந்திய சந்தையில் ரூ. 1,19,900 விலையில் கிடைக்கிறது. இந்த விலை 128 ஜிபி மெமரி கொண்ட பேஸ் மாடலுக்கானது ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 10,000 விலை குறைப்புடன் ரூ. 1,09,900 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 1,22,900 விலையில் கிடைக்கிறது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 7,000 குறைவு ஆகும். இந்த தள்ளுபடி பிளாக் டைட்டானியம், டெசர்ட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம் மற்றும் வைட் டைட்டானியம் என நான்கு வித வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1,44,900-இல் இருந்து ரூ. 1,32,900 என குறைக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 12,000 குறைவு ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மற்றும் 1 டிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 1,57,900 மற்றும் ரூ, 1,77,900 என மாறியுள்ளது. இது அவற்றின் உண்மை விலையை விட ரூ. 7,000 குறைவு ஆகும்.
விலை குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன் எக்சேஞ்ச் செய்து அதிகபட்சம் ரூ. 48,150 வரை தள்ளுபடி பெறமுடியும். இந்த தொகை பயனர் எக்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அதன் நிலையை பொருத்து நிர்ணயிக்கப்படும்.