9340mAh பேட்டரி, 33W சார்ஜிங்… விலை ரூ. 13,999 தான்… சம்பவம் செய்த ஒப்போ

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஒப்போ Pad SE மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஒப்போ Pad SE மாடலில் 11 இன்ச் FHD+ 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட LCD டிஸ்ப்ளே, அதிகபட்சம் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடல் இரட்டை TÜV Rheinland சான்றுகளை பெற்றிருக்கிறது. இவை லோ-புளூ லைட் மற்றும் ஃப்ளிக்கர்-ஃபிரீ பெர்ஃபார்மன்ஸ் வழங்குவதை உறுதிப்படுத்தும் ஒன ஒப்போ தெரிவித்துள்ளது.

புதிய ஒப்போ டேப்லெட் மாடல் மீடியாடெக் நிறுவனத்தின் ஹீலியோ G100 பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் 5MP கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடல் 9340mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த மாடல் 11 மணி நேரத்திற்கு வீடியோ பிளேபேக் வழங்குகிறது.

இதில் உள்ள மேம்பட்ட ஸ்மார்ட் பவர் சேவிங் மோட் இந்த டேப்லெட் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் தானாக சாதனத்தை ஆஃப் செய்துவிடும். இந்த டேப் மாடல் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15.1 கொண்டிருக்கிறது.

மெமரியை பொருத்தவரை 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

ஒப்போ Pad SE 4 ஜிபி + 128 ஜிபி வைபை ரூ. 13,999
ஒப்போ Pad SE 6 ஜிபி + 128 ஜிபி எல்டிஇ ரூ. 15,999
ஒப்போ Pad SE 8 ஜிபி + 128 ஜிபி எல்டிஇ ரூ. 16,999

இந்திய சந்தையில் புதிய ஒப்போ Pad SE மாடல் புளூ மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த டேப்லெட் முதல் விற்பனையின் போது ரூ. 12,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கும். விற்பனை ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது. ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஒப்போ பிரான்டு ஆப்லைன் ஸ்டோரில் இந்த டேப் விற்பனைக்கு கிடைக்கும்.

 

Leave a Comment