தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முதலே இந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வ்ருகிறது.
இந்த நிலையில் நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி , நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேலை கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.