ஒரே வன்மம் தான்.. அதை சிலரால் பொறுக்க முடியவில்லை.. முதலீட்டாளர் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

ஆளும் தமிழக அரசு ஊழல் மற்றும் பொய் செய்திகளை பரப்பி வருவதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தேர்தல் நெருங்கி வருவதால் ஆட்சியை கைப்பற்ற அடுக்கடுக்கான பொய்களை அளவுக்கு அதிகமாக கூறி வருவதாக அவர் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் கூட டிஆர்பி ராஜா செய்த முதலீடு மோசடிகளை புட்டு புட்டு வைத்தார் அதில்

”தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்றால் தமிழகத்தில் யாராவது ஒரு நபர் டீக்கடை ஆரம்பித்தால் கூட இது திராவிட மாடலால் உருவாக்கப்பட்டது என்று கூவுவார்கள். ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் அண்ணன் சந்திரபாபு நாயுடு 15 பில்லியன் முதலீட்டில் கூகுள் ஏ ஐ டெவலப்மெண்ட் நிறுவனத்தை சத்தமே இல்லாமல் தொடங்கி இருக்கிறார்”.

” முதலமைச்சர் நன்றாக ஏமாத்தி வருகிறார். வெளிநாட்டில் இருந்து யாராவது ரெண்டு பேர் வந்தால் போதும் கோட் சூட் போட்டுக் கொண்டு போட்டோ எடுத்து விளம்பரம் செய்வதே இவர்களுடைய வேலையா போச்சு”. என்று கிழித்தார். அது மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் திமுகவை விடாது விமர்சனம் செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட Zoho நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் ஆலையை நிறுவுவதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். சிவாஜி படத்தில் ’உங்களுடைய ப்ராஜெக்ட் வேல்யூ என்ன அதில் 50% எங்களுக்கு கொடுத்துடுங்க’ என்ற வசனம் வரும் அதே போல் தமிழ அரசும் கேட்க எனக்கு தமிழ்நாடே வேண்டாம் என்று அவர் ஒடிசா பக்கம் சென்றதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாதிரி தனக்கு வரும் விமர்சனங்களை எதிர்கொண்டு அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அதில்,” தமிழ்நாட்டின் முதலீட்டைப் பார்த்து சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நிறுவனங்கள் வெளி மாநிலத்திற்கு செல்வதாக வதந்தி பரப்பினார்கள். தொழில் முதலீடு கொண்டு வருவது எளிதானது அல்ல. எத்தனை கோடி முதலீடு என்பதை விட வேலைவாய்ப்புக்கு உகந்ததா என பார்த்து செயல்படுகின்றோம்”. என்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இவ்வாறு பேசியுள்ளார். தக்க பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு இருந்ததாக திமுக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment