நடிகரும், சினிமா விமர்சகருமான ஆதவன், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்காலம் குறித்து மிகத் தீவிரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நல்ல காரியங்களைச் செய்பவர்கள் விளம்பரத்தை (பப்ளிசிட்டி) நாட மாட்டார்கள் என்று கூறிய அவர், நடிகர் விஜய் 2027-ஆம் ஆண்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் திரும்புவார் என்றும் அதிரடியாகக் கணித்துள்ளார்.
“கலெக்ஷன் ஹீரோ” மீண்டும் வருவார்:
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தோல்வியைச் சந்திப்பார் என்றும், அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அவர் வீட்டில் அமர்ந்திருக்கும்போது, சினிமா விநியோகஸ்தர்கள் அவரைப் புகழ்ந்து பேசுவார்கள் என்றும் ஆதவன் தெரிவித்துள்ளார்.

“நல்லது பண்ணணும்னு நினைக்கிறவங்க பப்ளிசிட்டி பண்ண மாட்டாங்க. விஜய் கண்டிப்பாக 2027 இல் நடிப்பார். ஏனென்றால் இன்று வரைக்கும் கலெக்ஷன் அதிகம் கொடுக்கக் கூடிய ஹீரோ என்றால் அது விஜய் தான்.”
“2026 தேர்தலில் அவர் தோல்வி அடைந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் உட்கார்ந்து இருப்பார். அப்பொழுது அவரைப் பற்றி ஆகா ஓகோ என்று சினிமா விநியோகஸ்தர்கள் பேசும் பொழுது அவர் வீட்டில் உட்கார்ந்து இருப்பாரா? கிளம்பி உடனே நடிக்கப் போய்விடுவார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு படம் பண்ணுகிறேன் என்ற ஒரு அறிக்கை விடுவார்.” என்று சினிமா விமர்சகர் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவன் தெரிவித்துள்ளார்.
தற்போது முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து, தனது கடைசிப் படமான ‘ஜன நாயகன் ‘-க்குப் பிறகு நடிப்பதை நிறுத்தப் போவதாக விஜய் கூறியுள்ள நிலையில், ஆதவனின் இந்தக் கருத்து தமிழ்த் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.