இந்தியா முழுக்க e-Passport தொடக்கம்: புதிய சிப் பாஸ்போர்ட் எப்படி வேலை செய்கிறது?

இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக e-Passport சேவையை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இனிமேல், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மற்றும் renew செய்பவர்களுக்கும், சாதாரண புத்தக பாஸ்போர்ட்டே வரும்.

ஆனால் அதன் உள்ளே ஒரு மின்னணு சிப் பொருத்தப்பட்டிருக்கும். இது travel பாதுகாப்பையும், விமான நிலைய நடைமுறைகளையும் வேகமாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய e-Passportல், முதல் பக்கத்தினுள் ஒரு சிறிய RFID சிப் இருக்கும். இந்த சிப் உங்கள் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, கையொப்பம் போன்ற தகவல்களுடன், biometricயையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் modern passport standardsக்கு இணையாக உள்ளது. 

இந்த புதிய திட்டத்தால் fraud மற்றும் duplicate identity பயன்பாடு போன்ற பிரச்சனைகள் மிகக் குறையும். இந்த புதிய சிப் பாஸ்போர்ட்டின் முக்கிய நன்மையாக பார்க்கப்படுவது immigration நேரம் குறைவதை தான். மேலும், விரைவில், இந்திய விமான நிலையங்களில் automated e-Gates பரவலாக பயன்படுத்தப்படும்.

அப்போது பயணிகள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தாலே identity check விரைவாக முடிந்து விடும். இதே முறையை பல முன்னேற்ற நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி கொண்டு வருகின்றன.

பழைய பாஸ்போர்ட் வழக்கம்போலவே செல்லுபடியாகும். அவசரமாக e-Passport-க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. புதியதாக renew செய்தாலோ, மீண்டும் விண்ணப்பித்தாலோ தான் e-Passport வரும். இந்த மாற்றம், இந்திய பயணிகளுக்கு வரும் ஆண்டுகளில் பெரிய சலுகையாக அமையும். 

Leave a Comment