Connect with us

job news

PG முடித்திருந்தால் போதும்…தேசிய கல்வி ஆராய்ச்சி குழுவில் வேலை..! வெளியான அசத்தல் அறிவிப்பு..!

Published

on

NCERT Recruitment 2023

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (National Council of Educational Research and Training – NCERT) டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும். இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது காலியாக உள்ள ஜூனியர் ப்ராஜெக்ட் பெலோஸ் (JRF) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை படித்துவிட்டு தபால் மூலம் விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடம்: 

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் ஜூனியர் ப்ராஜெக்ட் பெலோஸ் பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பக்கலாம்.

விண்ணப்பதாரர் வயது:

ஜூனியர் ப்ராஜெக்ட் பெலோஸ் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு பயிற்சி குழு வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து  PG Degree முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் நேரடி நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.
  • நேர்காணல் ஜூன் 12ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறும்.
  • 11.00 மணிக்குப் பிறகு எந்த விண்ணப்பதாரரும் அனுமதிக்கப்பட மாட்டார்.
  • அறை எண் 407, 4வது தளம், ஜாகிர் உசேன் பிளாக், NCERT -ல் நேர்காணல் நடைபெறும்.

சம்பள விவரம்:

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.23,000 முதல் ரூ.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும். மேலும் இதுகுறித்த தகவலுக்கு https://ncert.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது Notification அறிவிப்பை அணுகலாம்.

NCERT Recruitment 2023

NCERT Recruitment 2023

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *