நம்மள பிடிக்காதவங்க நாலு பேர் இருக்கத்தான் செய்வாங்க!.. கூட்டணியை தட்டி வைக்கும் ஸ்டாலின்…

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து மிக முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “நமது தோழமைக் கட்சிகளில் ஒருசிலருக்கு நம்மைப் பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே சில தேவையற்ற கருத்துகளைப் பேசக்கூடும். அவர்களின் நோக்கம் கூட்டணியை உடைப்பதாகவோ அல்லது நம்மைப் பலவீனப்படுத்துவதாகவோ இருக்கலாம். அத்தகைய சூழ்ச்சிகளுக்கு நமது கட்சியினர் யாரும் பலியாகிவிடக் கூடாது,” என்று எச்சரித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை விட, உள்வீட்டுப் பூசல்களும் கூட்டணிக் குழப்பங்களுமே அதிக பாதிப்பைத் தரும். எனவே, மாநில செயலாளர்கள் அனைவரும் கவனமாகச் செயல்பட வேண்டும். மற்றவர்கள் என்ன பேசினாலும், நமது இலக்கு வெற்றியாக மட்டுமே இருக்க வேண்டும்,” என அறிவுறுத்தினார்.

சமீபகாலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருசிலர் திமுக அரசுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், தனது கட்சியினரைத் தயார்படுத்தும் விதமாகவும் முதல்வரின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது.

Leave a Comment