எவ்வளவு கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது- ஜெயக்குமார் ஆரூடம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ‘மகளிர் உரிமைத் தொகை’ விவகாரம் தற்போது அனல் பறக்கும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.

தமிழக அரசு இன்று அதிரடியாக, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000-த்தை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாகச் செலுத்தியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றன. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்:

“அதிமுக அறிவித்துள்ள ‘குலவிளக்கு’ திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள பெரும் வரவேற்பைக் கண்டு திமுக அரசு அச்சமடைந்துள்ளது. தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே இப்போது அவசர அவசரமாகப் பணத்தை வாரி வழங்குகிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் சரி, இந்த முறை திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்.”

Leave a Comment