Connect with us

job news

12ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு..! அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

Published

on

AIIA Recruitment 2023

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (All India Institute of Ayurveda – AIIA) என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் புது டெல்லியில் அமைந்துள்ள ஒரு பொது ஆயுர்வேத மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது ஒரு மருத்துவமனையாகவும், கல்வி, ஆராய்ச்சி, நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் மிக உயர்ந்த தரத்தை அமைக்க சிறப்பு மையமாகவும் செயல்படுகிறது.

தற்பொழுது, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.

AIIA Recruitment

AIIA Recruitment

காலிப்பணியிடங்கள்:

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், கணக்காளர் (3), ஆய்வக உதவியாளர் (11), கீழ் பிரிவு எழுத்தர் (2), ஆய்வக உதவியாளர் (Lab Attendant)(10), உதவி நிர்வாக அலுவலர் (1), யோகா பயிற்றுவிப்பாளர் (3), கதிரியக்க உதவியாளர் (1) என காலியாக உள்ள 31 பணியிடங்களை நிரப்ப  உள்ளது.

பதவி காலம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 2 வருட காலத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். நிறுவனத்தின் தேவை மற்றும் விண்ணப்பதாரரின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நீட்டிப்பு வழங்கப்படலாம்.

விண்ணப்பதாரர் வயது:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 25 முதல் 35 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

யோகா பயிற்றுவிப்பாளர்:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் யோகாவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • யோகா பயிற்றுவிப்பாளராக அரசு அல்லது அரசு உதவி பெறும்/ தன்னாட்சி/ புகழ்பெற்ற நிறுவனத்தில் ஓராண்டு பணி அனுபவம்.
  • யோகா பயிற்சிகளைச் செய்வதற்கான நடைமுறை திறன் பெற்றிருக்க வேண்டும்.

உதவி நிர்வாக அலுவலர்:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/மாநில அரசு/தன்னாட்சி அமைப்புகளில் அலுவலக கண்காணிப்பாளராக அல்லது அதற்கு இணையான பதவியில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

கணக்காளர்:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.காம்/பிபிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/மாநில/ தன்னாட்சி/பெரிய தொழில்துறையில் பட்ஜெட்/ கணக்குகளில் 2 வருட அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

கதிரியக்க உதவியாளர்:

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12ம் வகுப்பு அல்லது அறிவியலில் அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ரேடியோகிராஃபியில் வழக்கமான டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • எந்தவொரு மருத்துவமனையில் 2 வருட அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர்:

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12ம் வகுப்பு அல்லது அறிவியலில் அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் தொடர்புடைய துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் (Lab Attendant):

சம்மந்தப்பட்ட துறையில் 4 வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கீழ் பிரிவு எழுத்தர்:

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • தட்டச்சு வேகம் ஆங்கிலத்தில் 30 w.p.m அல்லது ஹிந்தியில் 25 w.p.m இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://aiia.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் இருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • அனைத்து சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், வயது, கல்வித் தகுதிகள், அனுபவம் போன்ற ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  • பின் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பதாரர்கள் தபால் உறையில் தாங்கள் விண்ணப்பிக்கும் பணியை குறிப்பிட்டு எழுத வேண்டும்.
  • அனுப்பவேண்டிய முகவரி: இயக்குனர், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) கௌதம்புரி, சரிதா விஹார், மதுரா சாலை, புது டெல்லி – 110076
  • மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி, EWS பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: 

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பபடிவத்தை அனுப்பியிருக்க வேண்டும்.

google news