Connect with us

tech news

ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

Published

on

moblie

இந்திய பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் அனைத்து விலை பிரிவுகளிலும் ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. லோ-எண்ட் எனப்படும் குறைந்த விலையில் துவங்கி டாப் எண்ட் அல்லது ஃபிளாக்‌ஷிப் ரேன்ஜ் என்று அழைக்கப்படும் விலை உயர்ந்த ரகம் வரை பல்வேறு விலை பிரிவுகளில் வித்தியாசமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

பயனர்களை கடந்து அவர்களுக்கு ஏராளமான ஆப்ஷன்களை வழங்கும் நோக்கில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டே வருகின்றன. அந்த வரிசையில், ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

 

Realme-10 :

ரியல்மி 10: ரூ. 12 ஆயிரத்து 499 எனும் விலையில் கிடைக்கும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இது. விலையை கடந்து தலைசிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி வரையிலான ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் FHD+ ரெசல்யூஷன் கொண்ட AMOLED பேனல், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

realme 10

realme 10

போக்கோ M5:

ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் போக்கோ M5 இந்த பிரிவில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் மற்றும் 50MP பிரைமரி கேமரா, 6.58 இன்ச் பேனல் மற்றும் 90Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

Realme-11-Pro

Realme-11-Pro

ரியல்மி 9i:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்ட ரியல்மி 9i மாடல் 6 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 90Hz IPS LCD ஸ்கிரீன் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் டார்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

realme 9i

realme 9i

ரெட்மி 11 பிரைம் 5ஜி:

குறைந்த விலையில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஸ்மார்ட்போன் எனும் பெருமையை ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் பெற்று இருக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

redmi 11 prime 5g

redmi 11 prime 5g

 

சாம்சங் கேலக்ஸி F14 5ஜி:

பயனர்களுக்கு ஒரு நாள் முழுக்க, சிலருக்கு அதையும் தாண்டி நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1330 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா மற்றும் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட FHD+ பேனல் கொண்டிருக்கிறது.

Samsung-Galaxy-F14 1

Samsung-Galaxy-F14 1

google news