பத்தாம் வகுப்பு முடித்தால் போதும்…. இந்திய ராணுவத்தில் வேலை காத்திருக்கு…!

இந்திய ராணுவத்தில் சிவிலியன் சுவிட்ச் போர்டு ஆபரேட்டர் பதவிக்கு 56 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

Indian Army1

வயதுத்தகுதி

18 முதல் 25 வயது வரை.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்

மாதம் ரூ.21,700

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட இணைதளத்திற்கு சென்று விண்ணப்பப்படிவம் பெற்று அதைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தைக் கடைசி தேதிக்குள் அனுப்பி விட வேண்டும்.

Indian Army 3

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் அறிவிக்கையை முழுவதும் கவனமாகப் படித்து அதன்படி விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அத்துடன் 2 தபால் கவரில் சுய விலாசமிட்டு ரூ.25க்கான ஸ்டாம்ப்பை ஒவ்வொரு கவரிலும் ஒட்டி அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link Form

 

Leave a Comment