Connect with us

latest news

என்ன ஆனாலும், இதை மட்டும் செய்யாதீங்க.. மொபைல் பயனர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

Published

on

Ashwini-Vaishnaw

மத்திய டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்திய மொபைல் போன் பயனர்களுக்கு மிக முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத மொபைல் நம்பர்களில் (Unknown Numbers) இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

“அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மக்கள் ஏற்கவே கூடாது. ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்கு அறிந்த எண்களில் (டெலிபோன்/மொபைல்) இருந்து வரும் அழைப்புகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்,” என்று ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் குற்றங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறிமுகம் இல்லாத எண்களில் அழைப்புகள் வரும் போது, சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே குறுந்தகவல் அனுப்பி இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். மத்திய அமைச்சகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

Ashwini-Vaishnaw

#Ashwini-Vaishnaw

சமீபத்தில் தான், இந்தியாவில் சஞ்சர் சாதி பெயரில் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையை கொண்டு ஸ்பேம் அழைப்புகளை குறைக்க முடியும் என்பதோடு, சைபர் குற்றங்களையும் தடுக்க முடியும். இதன் மூலம் இதுவரை 40 லட்சம் சிம் கார்டுகள், 41 ஆயிரம் போலியான பாயிண்ட் ஆஃப் சேல் ஏஜண்ட்கள் முடக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ஸ்பேம் அழைப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு அதிகப்படியான ஸ்பேம் அழைப்புகள் வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் அடங்கும். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் இது தொடர்பாக 36 லட்சம் மொபைல் இணைப்புகள் முடக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் வாட்ஸ்அப் நிறுவம் போலி அழைப்புகளை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் சிஸ்டம்களை மாற்றியமைத்து இருப்பதாக சமீபத்தில் தான் அறிவித்து இருந்தது.

“எங்களின் புதிய கட்டுப்பாடுகள் மூலம், தற்போதைய ஸ்பேம் அழைப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும். எங்களது பயனர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பான அனுபவத்தை வழங்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *