Connect with us

automobile

அதிக ரேன்ஜ் வழங்கும் டாப் 5 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள்

Published

on

ev scooter

எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றி பேசும் போது, அனைவர் மனதிலும் எழும் பொதுவான ஒரே கேள்வி, அது எவ்வளவு தூரம் செல்லும் அல்லது அதன் ரேன்ஜ் எத்தனை கிலோமீட்டர்கள் என்பது தான். முன்னதாக அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பட்டியலில் ரெவோல்ட் ஆர்.வி. 300, கபிரா கே.எம். 4000, ஒடிசி ஹாக் பிளஸ், ரெவோல்ட் ஆர்.வி. 400 மற்றும் ஒகினவா ஐ பிரைஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருந்தன.

தற்போது இவற்றை மிஞ்சும் அளவுக்கு அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் கிடைக்கின்றன. அந்த வகையில் அதிக ரேன்ஜ் வழங்கும் டாப் 5 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

கிராவ்டன் குவாண்டா:

ஐதராபாத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் அறிமுகம் செய்த குவாண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Crawton Quanta

Crawton Quanta

அல்ட்ராவைலட் எஃப்77 :

பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனத்தின் எஃப்77 மாடல் இந்திய சந்தையில் அதிவேகமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு அதிகபட்சம் 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த எலெக்ட்ரிக் பைக் 307 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

Ultraviolet F77

Ultraviolet F77

சிம்பில் ஒன் :

சிம்பில் எனபர்ஜி நிறுவனங்த்தின் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 225 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று IDC சான்று பெற்று இறுக்கிறது.

simple one

simple one

ஐவூமி எஸ்1 240:

2.5 கிலோவாட் ஹவர் ஹப் மோட்டார் மற்றும் 4.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கும் ஐவூமி எஸ்1 240 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 240 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 51 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

Ivumi

Ivumi

ஒலா எஸ்1 ப்ரோ :

இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி நிறுவனமாக ஒலா எலெகர்ட்ரிக் இருக்கிறது. இதன் ஃபிளாக்‌ஷிப் மாடல் தான் ஒலா எஸ்1 ப்ரோ. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு அதிகபட்சம் 181 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

ola s1 pro

ola s1 pro

google news