Connect with us

Uncategorized

மாதம் ரூ.1,40,000 சம்பளத்தில் C-DAC நிறுவனத்தில் வேலை..! இப்பவே அப்ளை பண்ணுங்க..!

Published

on

CDAC Recruitment

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC), இந்திய அரசின் தொழில்நுட்பத்துறை, தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு அமைச்சகத்தின் (MeitY) கீழ் இயங்கிவரும் ஒரு தன்னாட்சி அறிவியல் நிறுவனம் ஆகும். C-DAC நாட்டின் கொள்கை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நடைமுறை தலையீடுகள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்த MeitY உடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் ஒரு தனித்துவமான அம்சத்தை பிரதிபலிக்கிறது.

இந்த C-DAC நிறுவனம் திருவனந்தபுரத்தில் திட்ட அலுவலர் (Project Engineer) பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடங்கள் மற்றும் ஒப்பந்த காலம்:

திட்ட அலுவலர் பதவிக்காக 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர் திருவனந்தபுரத்தில் ஒப்பந்த அடிப்படையில் 1 வருட காலத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். நிறுவனத்தின் தேவை மற்றும் விண்ணப்பதாரரின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நீட்டிப்பு வழங்கப்படலாம்.
CDAC Recruitment

CDAC Recruitment

விண்ணப்பதாரர் வயது:
திட்ட அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
திட்ட அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து CA / CS அல்லது இரண்டு வருட முழுநேர எம்பிஏ (நிதி) / வணிகத்தில் முதுகலை பட்டதாரி அல்லது அதற்கு சமமான தொடர்புடைய தொழில்முறை தகுதி மற்றும் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
மெட்டீரியல் மேனேஜ்மென்ட்டில் இரண்டு வருட முழுநேர MBA/ முதுகலை பட்டதாரி அல்லது அதற்கு சமமான தொடர்புடைய தொழில்முறை தகுதி மற்றும் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
  • திட்ட அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்களை CDAC இணையதளம் www.cdac.in மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • விண்ணப்பதாரர்கள் Application ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறான தகவல்களைச் சமர்ப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
  • விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும். தேர்வு செயல்முறை முடியும் வரை செயலில் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் முன் தயாராக வைத்திருக்க வேண்டும்.
  • கணினியால் ஒரு தனிப்பட்ட விண்ணப்ப எண் உருவாக்கப்படும். இந்த விண்ணப்ப எண்ணைக் குறித்து வைத்து, எதிர்கால குறிப்பு மற்றும் பயன்பாட்டிற்காக விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருக்கவும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
  • அரசுத் துறைகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது தங்கள் தற்போதைய பணியாளரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நேர்காணல்/திறன்/நடைமுறைத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ரூ.590 கட்டணமாக செலுத்த வேண்டும். இதை விண்ணப்பதாரர்கள் நெட் பேங்கிங்/ஒன்றிய பேமென்ட் இன்டர்ஃபேஸ் மூலம் செலுத்த வேண்டும். SC/ST/PwD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.35,500 முதல் ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.
google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

ரஜினிகாந்த் உடல் நிலை…பிரதமர் மோடி ஆர்வம்…விஜய் வாழ்த்து…

Published

on

Modi Vijay

தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமழ் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வந்து கொண்டிருக்கிறார் இவர்.

ரஜினியின் நடிப்பில் தயாராக உள்ள “வேட்டையன்” திரைப்படம் இந்த மாதம் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் டிரையலர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடப் பட உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அவர். ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த குழாயில் உள்ள அடைப்பும், வீக்கமும் கண்டறியப்பட்டது.

அவருக்கு சிகீட்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் அவர் குணமடைந்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என சொல்லியிருந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து கேட்டறிந்திருக்கிறார் பிரதமர் மோடி. ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், ரஜினியின் உடல் நிலை குறித்த விவரங்கள் பற்றி கேட்டிருக்கிறார்.

Rajini

Rajini

அதோடு ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாக பிரதமர் மோடி லதா ரஜினிகாந்திடம் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த்
அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

Uncategorized

தங்கம் வாங்க நேரம் இது தானா?…வீழ்ச்சியில் விற்பனை விலை…

Published

on

Gold

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை. திடீரென உச்சக்கட்டத்தை அடைந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. மாத இறுதியில் விலை வீழ்ச்சியை நோக்கி பயணிக்கத் துவங்கியது. செப்டம்பர் மாதத்தின் கடைசி நாளான நேற்று தங்கத்தின் விலை சரிவை சந்தித்திருந்தது.

ஏழாயிரம் ரூபாயை கடந்து தொடர்ந்து அதிர்ச்சி அளித்து வந்த தங்கத்தின் விலை படிப்படியக குறைந்து வருகிறது. நேற்று பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து ஏழாயிரத்து என்பது ரூபாய்க்கு (ரூ.7,080/-)விற்பனை செய்யப்பட்டது ஒரு கிராம் தங்கம் . சவரன் ஒன்றின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ. 56,640/-) விற்பனையானது.

Silver Jewel

Silver Jewel

நேற்றைப் போலவே இன்றும் சென்னையின் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிராம் ஒன்றிற்கு நேற்றை விட முப்பது ரூபாய் குறைந்து ஏழாயிரத்து ஐம்பது ரூபாய்க்கு (ரூ.7,050/-) விற்கப்ப்டுகிறது இன்று.

இதனால் ஒரு சவரன் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று இருநூற்றி நாற்பது ரூபாய் (ரூ.240/-)குறைந்துள்ளது. ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.56,640/-) நேற்று விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாயாக (ரூ.56,400/-)உள்ளது.

வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் ஏதும் காணப்படவில்லை. நேற்று ஒரு கிராம் நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட வெள்ளி இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) உள்ளது.

 

google news
Continue Reading

Uncategorized

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

Published

on

Gautam Gambhir

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில் ஆதீக்கம் செலுத்தி, விளையாட்டை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அணிகளாக திகழ்ந்து வந்தது. அதிலும் வெஸ்ட் இன்டீஸ் அணியின் வேகப் பந்து வீச்சிற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய பேட்ஸ்மேன்கள் தான் அதிகம்.

பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினாலும், வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியை பற்றி பேசினாலே நினைவில் வருவது அவர்களது பவுலர்களும், அவர்களின் அதிவேக பந்து வீச்சும் தான்.ஆஸ்திரேலிய அணியும் பின் நாட்களில் இந்த விளையாட்டில் தனது ஆதிக்கத்தை துவங்கி இப்போது வரை தனக்கென ஒரு தனி இடத்தை கைவசப்படுத்தியே வைத்திருக்கிறது.

வேகப் பந்து வீச்சால் எதிரணியை கலங்கடித்த வெஸ்ட் இன்டீஸ் அணி இப்போது கிரிக்கெட் விளையாட்டை புதிதாக விளையாடி வரும் கத்து குட்டி அணி போல செயல் பட்டு வருகிறது. 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தி வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஈடாக கிரிக்கெட் விளையாடுவதில் நாங்களும் குறைந்தவர்கள் அல்ல என நிரூபித்தது.

அதன் பின்னர் இந்த போட்டியில் இந்திய அணி தனக்கான இடத்தை இன்று வரை உறுதி செய்து வருகிறது. ஆரம்பத்தில் இந்திய அணி என்றாலே பேட்டிங்கிற்கு பெயர் போன அணியாக பார்க்கப்பட்டது.

ஆல்-ரவுண்டர் கபில் தேவிம் பந்து வீச்சுக்கு இணையான பந்து வீச்சாளர்களை தேடியது இந்திய அணி துவக்கத்தில் கவாஸ்கர், டெண்டுல்கர், அசாருதீன், டிராவிட், கங்குலி, லெட்சுணன், சேவாக், மஞ்சிரேக்கர், அஜய் ஜடேஜா, கம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, விராத் கோலி, தோனி, ரோஹித் சர்மா, என அடுக்கிக்கொண்டே போகலாம் பேட்ஸ்மேன்களை.

Ashwin Jadeja

Ashwin Jadeja

ஆனால் கபில்தேவ், ஸ்ரீநாத், கும்ளே, ஹர்பஜன் சிங் என ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய அளவிலான பவுலர்கள் சொற்பமாக இருந்து வந்த நேரமும் உண்டு.

இது குறித்து கருத்து சொல்லியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்,  ஷமி – ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் போன்றவர்களின் வருகைக்கு பிறகு தான் இந்திய அணியின் பவுலிங் பற்றி அதிகமான பேச்சுகள் வரத்துவங்கியிருக்கிறது என்றிருக்கிறார். இந்திய அணி பவுலர்களுக்கான அணியாகவும் மாற இவர்களே காரணம் என்றார்.

Shami Bumrah

Shami Bumrah

பவுலிங்கிலும் இந்திய அணி சிறந்தது என பார்க்க காரணமாக இருப்பவர்கள் இவர்கள் என சொல்லியதோடு பும்ராவை பற்றியும் பேசியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் பும்ரா ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என சொல்லியதோடு மட்டுமல்லாமல், அவரால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என பும்ராவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

google news
Continue Reading

latest news

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

Published

on

Parotta

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும் அனேக கோவில்களில் பிரசாதமாக தயிர் சாதம், லெமன் சாதம், கற்கண்டு சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், பொங்கல், சக்கரைப் பொங்கல் போன்றவை வழங்கப்படும்.

ஆனால் கோவில் திருவிழா ஒன்றில் பிரசாதமாக ப்ரோட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை கேள்விப்பட்டவர்கள்  ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனார்கள். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

Parotta

Parotta

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அக்கம் பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களும், வெளியூர்களில் பணி செய்பவர்களும் ஆர்வத்துடன் பங்கற்று வருவதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடத்தப்படும் இக்கோவில் திருவிழாவின் இந்தாண்டு திருவிழா தினசரி பூஜைகளுடன் பக்தி மயமாக  கொண்டாடப்பட்டது. மேளதாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் கலைகட்டியிருந்தது.

இந்நிலையில் திருவிழாவின் இறுதி நாள் அன்று பக்தர்களுக்கு ப்ரோட்டா பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய பத்தாயிரம் ப்ரோட்டாக்கள் தயார் செய்யப்பட்டதாக விழாக்கமிட்டி சார்பில் சொல்லப்பட்டது.

கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே ப்ரோட்டாவை பிரசாதமாக வழங்கபட்டதாக சொல்லப்பட்டது. இப்படி வித்தியாசம் காட்டுவதால் அடுத்த ஆண்டு வரை பகதர்களின் நினைவில் பத்திரகாளி அம்மன் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம் நிற்கும் எனவும் சொல்லப்பட்டது.

கடந்த ஆண்டு திருவிழாவின் போது சப்பாத்தி வழங்கப்பட்டது அதிக வரவேற்பை பெற்றதால் இந்தாண்டு ப்ரோட்டா வழங்கப்பட்டதாக சொல்லபட்டது.

google news
Continue Reading

latest news

நண்பர்களிடையே தகராறு…குடிசைக்கு தீ வைத்த கொடூரம்…

Published

on

Hut

மது குடித்திருந்த நிலையில் நண்பர்கள் இருவருக்கிடையே நடைபெற்ற தகராறில் குடிசைக்கு தீ வைத்த போதை ஆசாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மலமலவென பற்றி எரிந்த தீ அருகில் இருந்த குடிசைகள் மீதும் பரவியது.இதனால் அருகில் இருந்த நான்கு குடிசைகளிலும் தீ பற்றி எரிந்தது.

இந்த சம்பவத்தில் குடிசைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. குடிபோதையில் இளைஞர் செய்த இந்த கொடூர காரியம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் பிரசாந்த். தனது வீட்டின் அருகே நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரசாந்த் மற்றும் அவரது நண்பரான நவாசும் போதையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், பிரசாந்த் மற்றும் நிவாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றிப்போன நிலையில் பிரசாந்த் தாக்குதலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அருகில் இருந்த குடிசைக்குள் சென்று ஒளிந்ததாகவும், ஆத்திரத்தில் இருந்த அந்த போதை ஆசாமி பிரசாந்தை பழி வாங்கும் நோக்கத்தில் பிரசாந்த் ஒளிந்திருந்ததாக சொல்லப்படும் குடிசைக்கு தீ வைத்திருக்கிறார்.

Fire Hut

Fire Hut

நள்ளிரவு இரண்டு மணிக்கு நடந்த இந்த சம்பவம் என்பதால் குடிசைகள் பற்றி எரிவது அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தெரியவில்லை. இந்நிலையில் குடிசையில் வைக்கப்பட்ட தீ மலமலவென அருகிலிருந்த குடிசைகளுக்கும் பரவியது.

சிறுது நேரத்திற்கு பிறகு குடிசைக்குள் இருந்தவர்கள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே படுத்து தூங்கிக்கொண்டிருந்த தங்களது குழந்தைகளுடன் வெளியேறியுள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது நிம்மதி பெரு மூச்சு விட வைத்தது.

ஆனாலும் இந்த சம்பவத்தில் நான் கு குடிசைகள் முற்றிலும் தீயில் கருகியிருக்கிறது. குடிசைவாசிகளின் உடமைகள் அனைத்தும் தீயில் கருகி விட்டதாக அந்தப் பகுதி மக்கள் சொல்லியிருந்தனர். போதையில் குடிசைக்கு தீ வைத்த நபரை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

google news
Continue Reading

Trending