‘ECIL’ நிறுவனத்தில் 47 பணியிடங்கள்..! டிப்ளமோ முடித்திருந்தால் போதும்…உடனே அப்ளை பண்ணுங்க..!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) என்பது இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமாகும். புதுமை மற்றும் உள்நாட்டுமயமாக்கலில் உத்வேக மின்னணுவியல் துறையில் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நெட்வொர்க் & உள்நாட்டுப் பாதுகாப்பு, CBRN மற்றும் மின்-ஆளுமை போன்ற உத்தி சார்ந்த துறைகளில் ECIL செயல்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது, ஒப்பந்த கால அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

ECIL நிறுவனம் திட்டப் பொறியாளர் (7), தொழில்நுட்ப அதிகாரி (28), உதவி திட்டப் பொறியாளர் (12) ஆகிய பணிகளில் காலியாக உள்ள 47 பணியிடங்களை நிரப்ப உள்ளது. பணியிட விவரங்களுக்கு Annexure-I என்ற அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பதாரர் வயது:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 33க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:
ECIL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் டிப்ளமோ, பி.இ./பி.டெக் முடித்திருக்க வேண்டும். தகுதி விவரங்களுக்கு Annexure-I என்ற அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு விண்ணப்பதாரர்கள் Application Form பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களை தவறில்லாமல் நிரப்ப வேண்டும்.
  • அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
  • குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்
  • நேர்காணல் முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • ECIL Recruitment
    ECIL Recruitment

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.24,500 முதல் ரூ.55,000 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஜூன்  16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Leave a Comment