automobile
இந்த கிட் இருந்தா போதும்.. நிமிடங்களில் எலெக்ட்ரிக் சைக்கிள் உருவாக்கிடலாம்..!
ஜிபூஸ்ட் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இ-பைக் கன்வெர்ஷன் கிட் எந்த சைக்கிளையும், எலெக்ட்ரிக் சைக்கிளாக மாற்றிவிடும். மேலும் இதற்கு அதிகபட்சமாக பத்து நிமிடங்களே ஆகும். ஜிபூஸ்ட் வி8 கிட் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எங்கும் எளிதில் கொண்டு செல்லும் வகையிலும், குறைந்த எடை மற்றும் அதிக சத்தமின்றி அமைதியாக இன்ஸ்டால் செய்து விட முடியும்.
எந்த விதமான சைக்கிளிலும் பொருத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஜிபூஸ்ட் வி8 கிட் ஒட்டுமொத்த எடை வெறும் 950 கிராம்கள் தான். குறைந்த எடை கொண்ட கன்வெர்ஷன் கிட் என்பதால், இதனை பயணங்களின் போதும் எடுத்து செல்ல முடியும். இதனை வாடகைக்கு எடுக்கும் மிதிவண்டிகளிலும் பயன்படுத்த முடியும்.
வி8 கிட் அதிகபட்சம் 900 கிலோவாட் திறன் வெளிப்படுத்துகிறது. இதன் டிசைன் காரணமாக எளிதில் மின் திறன் தீர்ந்து போகும். ஆனாலும், ரோலர் சிஸ்டம் மூலம் பின்புற வீலுக்கு மீண்டும் திறன் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் கொண்டு ஆஃப் ரோடு பயன்பாடுகளுக்கு சாத்தியமில்லை. இவ்வாறு செய்யும் போது கிட் பயனற்று போகும் வாய்ப்புகளும் உண்டு.
ஜிபூஸ்ட் வி8 கிட் மிக குறைந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கன்வெர்ஷன் கிட் மூன்றுவித பேட்டரி அமைப்புகளில் கிடைக்கிறது. இதில் முதல் ஆப்ஷன் 250 வாட் ஹவர் பேட்டரியும், இரண்டாவது ஆப்ஷன் 375 வாட் ஹவர் பேட்டரியும், மூன்றாவது வேரியண்ட் 453 வாட் ஹவர் பேட்டரியும் கொண்டிருக்கிறது.
இவற்றின் விலை முறையே 1050 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 86 ஆயிரத்து 699 என்றும், 1285 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 103 என்றும் டாப் எண்ட் மாடல் விலை 1780 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 975 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.