Connect with us

automobile

இன்னும் ஒரே மாதத்தில் இந்தியா வரும் நான்கு புது பைக்குகள்.. என்னென்ன தெரியுமா?

Published

on

upcomming bike

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் பற்றிய விவரங்கள் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்து விட்டன.

அந்த வகையில் அடுத்த ஒரு மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய இருசக்கர வாகனங்கள் (பைக்) பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹீரோ மோட்டோகார்ப் இந்திய சந்தையில் இந்த நிதியாண்டில் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் HD X440, பேஷன் பிளஸ், எக்ஸ்டிரீம் 200S 4V, கரிஸ்மா ZMR மற்றும் மேம்பட்ட எக்ஸ்டிரீம் 160R உள்ளிட்ட மாடல்கள் அடங்கும். இந்த மாதத்திலேயே பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

1 – ஹீரோ எக்ஸ்டிரீம் 160R :

hero xtreme 160r

hero xtreme 160r

ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் டீசர் வீடியோவில் புதிய எக்ஸ்டிரீம் 160R மாடல் ஜூன் 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. எண்ட்ரி லெவல் நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடல் அறிமுகம் முதலில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

02 – பஜாஜ் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர்/ரோட்ஸ்டர் :

பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் இடையேயான கூட்டணியின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலின் சர்வதேச வெளியீடு ஜூன் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக இந்த மாடலின் டெஸ்டிங் இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நடைபெற்று வருகிறது.

triumph

triumph

இரு நிறுவனங்கள் கூட்டணியின் சர்வதேச வெளியீடு பிரிட்டனில் நடைபெற இருக்கிறது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் முதல் மோட்டார்சைக்கிள் 400சிசி திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடலின் உற்பத்தி சக்கன் ஆலையில் நடைபெற்ற இருக்கிறது.

3 – ஹார்லி டேவிட்சன் X440 :

harly davidson

harly davidson

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் ஜூலை 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் 440சிசி சிங்கில் சிலண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சம் 35 ஹெச்பி வரையிலான திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *