Connect with us

job news

ஆயில் இந்தியா லிமிடெட்-ல் வேலைவாய்ப்பு..! மாதம் 10,000 சம்பளம்..இதுதான் கடைசி தேதி..!

Published

on

Oil India Recruitment 2023

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL), நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்த்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அழைப்பு அடிப்படையில் டொமைன் நிபுணர் பணியில் காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்புவதற்கு, சுரங்கங்கள், கனிமங்கள் அல்லது ஹைட்ரோகார்பன் துறையில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஓய்வுபெற்ற அதிகாரிகளை நியமிக்க உள்ளது.

விண்ணப்பதாரர் வயது:

டொமைன் நிபுணர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 63 வயது உடையவராக இருக்க வேண்டும் வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு ஆணையம் வெளியிட்டுள்ள Notification  அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

முதுநிலை / எம்.எஸ்சி. புவியியல் / பயன்பாட்டு புவியியலில் படித்து முடித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அனுபவம்:

டொமைன் நிபுணர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் சுரங்கங்கள், கனிமங்கள் அல்லது ஹைட்ரோகார்பன் துறையில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஓய்வுபெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும்.

விண்ணப் பிக்கும் முறை:

  • டொமைன் நிபுணர் பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.oil-india.com அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச்சென்று Notification அறிவிப்பை படிக்க வேண்டும்..
  • பின் அறிவிப்பில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • தங்களின் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான அனைத்து ஆவணங்களுடன் ED(HR), Oil India Limited, Plot No. 19, Sector 16A, Noida – 201301 என்ற முகவரி அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

டொமைன் நிபுணர் பதவிக்கு நியமிக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 8 ஆகும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *