Connect with us

latest news

விரைவில் வெளியாகும் நத்திங் போன் (2) பற்றி இதெல்லாம் தெரியுமா?

Published

on

Nothing-Phone 2

ஒன்பிளஸ் நிறுவனர் கார்ல் பெய் உருவாக்கிய நத்திங் நிறுவனம் இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் என மெல்ல தொழில்நுட்ப சந்தையில் கால்தடம் பதிக்க துவங்கி இருக்கிறது. நத்திங் அறிமுகம் செய்த முதல் தலைமுறை இயர்பட்ஸ் மற்றும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனக்கென தனி அடையாளத்தை பெற்று இருக்கிறது.

இந்த நிலையில், நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி இருக்கிறது. அதன்படி நத்திங் போன் 2 மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி தகவல்களை அவ்வப்போது நிறுவனம் சார்பில் கார்ல் பெய் தெரிவித்து வருகிறார். இதில் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரில் துவங்கி, அதன் ஒ.எஸ். அம்சங்கள் வரையிலான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Nothing-Phone 2

Nothing-Phone 2

இதுதவிர நத்திங் போன் (2) பற்றிய தகவல்கள் இணையத்திலும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. புதிய நத்திங் போன் (2) அதன் முந்தைய வெர்ஷனை விட ஹார்டுவேர் ரீதியிலான அப்டேட் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கவனிக்க கடினமாக்க செய்யும் அப்டேட்கள் செய்யப்படுகின்றன.

இத்துடன் நத்திங் போன் (2) மென்பொருளும் மாற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறது. புதிய நத்திங் போன் (2) அறிமுகமாக மேலும் சில காலம் உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் மூன்று மிகமுக்கிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹார்டுவேர் :

நத்திங் போன் (2) மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என நத்திங் நிறுவனர் கார்ல் பெய் ஏற்கனவே தெரிவித்து விட்டார். இது முந்தைய நத்திங் போன் (1) மாடலில் உள்ள ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் பிராசஸரை விட பெருமளவு மேம்பட்ட பிராசஸர் ஆகும். நத்திங் போன் (1) மாடல் மல்டி டாஸ்கிங் மற்றும் மேலும் சில பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் சீராக இயங்கியது.

இதுதவிர நத்திங் போன் (2) மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நத்திங் போன் (2) மாடல் பல்வேறு பயன்பாடுகளிலும் சக்திவாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

Nothing-Phone 2

Nothing-Phone 2

மென்பொருள் :

ஹார்டுவேரை தொடர்ந்து நத்திங் போன் (2) மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அதில் உள்ள சாஃப்ட்வேர் (மென்பொருள்) இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய நத்திங் போன் (2) மாடலில் நத்திங் ஒ.எஸ். 2.0 வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஒ.எஸ். ஸ்மார்ட்போனில் ஏராளமான புதிய அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

“2023 மென்பொருளுக்கான ஆண்டு. நத்திங் நிறுவனத்தின் உண்மையான தோற்றம் மற்றும் தனித்துவம் மிக்க ஸ்மார்ட்போன் பயன்பாட்டை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் நத்திங் ஒ.எஸ். 2.0 இருக்கும்,” என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. வழக்கத்தை போன்றே நத்திங் போன் (2) மாடலுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட்களும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களும் வழங்கப்பட இருக்கிறது. நத்திங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்க முயற்சித்து வருகிறது.

டிசைன் :

நத்திங் போன் (1) மாடல் அதன் டிசைன் அடிப்படையில் உலக சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதே நிலையை புதிய நத்திங் போன் (2) மாடலும் பெறும் என்று எதிர்பார்க்கலாம். நத்திங் போன் (2) டிசைன் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், டிசைன் அடிப்படையில் புதிய போன் (2) மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் நத்திங் போன் (1) போன்றே காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது.

டிசைன் தவிர நத்திங் போன் (2) மாடலின் க்லிம்ஃப் இன்டர்ஃபேசில் வித்தியாசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நத்திங் போன் (2) மாடலில் எந்த அளவுக்கு மாற்றங்கள் வழங்கப்படும் என்ற யோசனை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது

google news