Connect with us

latest news

இலவச ஜியோசாவன் ப்ரோ சந்தா வழங்கும் ஐந்து புதிய திட்டங்கள் – ஜியோ அதிரடி!

Published

on

jio digital life

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. பிரீபெயிட் பயனர்களுக்கு அடிக்கடி ரிசார்ஜ் திட்டங்களை மாற்றியமைத்து வரும் ஜியோ தற்போது ஜியோசாவன் ப்ரோ சந்தா வழங்கும் பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்து இருக்கிறது.

பயனர்களுக்கு கனெக்டிவிட்டி மற்றும் மியூசிக் சந்தா என இருவித பலன்களை கொடுக்கும் வகையில், இந்த ரிசார்ஜ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் விலை மற்றும் மொத்த பலன்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

jio saavan

jio saavan

ஜியோவின் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ. 269, ரூ. 529, ரூ. 589, ரூ. 739 மற்றும் ரூ. 789 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை அனைத்திலும் பயனர்களுக்கு ஜியோசாவன் ப்ரோ சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பலன்களும் வழங்கப்படுகிறது. ஜியோசாவன் ப்ரோ சந்தா அதன் முந்தைய திட்டங்களை விட வித்தியாசமானது ஆகும்.

ஜியோ ரூ. 269, ரூ. 539 மற்றும் ரூ. 739 ரிசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா பயன்பாடு 2 ஜிபி-யை கடந்த பின் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். இத்துடன் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 589 மற்றும் ரூ. 789 ரிசார்ஜ்களில் தினமும் 2 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ. 269 விலை கொண்ட ஜியோ ரிசார்ஜ் செய்வோருக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோசாவன் ப்ரோ சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 529 மற்றும் ரூ. 589 விலை கொண்ட ரிசார்ஜ்களை செய்வோருக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோவான் ப்ரோ சேவை வழங்கப்படுகிறது. ரூ. 739 மற்றும் ரூ. 789 விலை கொண்ட பிரீபெயிட் ரிசார்ஜ்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோசாவன் ப்ரோ சந்தா வழங்கப்படுகிறது.

jio offers

jio offers

ஜியோசாவன் ப்ரோ சந்தாவை எப்படி பயன்படுத்த வேண்டும் ?

ஜியோசாவன் அக்கவுன்டை ரிசார்ஜ் செய்ய பயனர்கள், முதலில் இதன் சந்தா வழங்கும் ரிசார்ஜ்களை மைஜியோ, ஜியோ வலைதளம் அல்லது மூன்றாம் தரப்பு சேவைகளின் மூலம் ரிசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

1 – ஜியோ மொபைல் நம்பர் மூலம் ஜியோசாவன் ப்ரோ ரிசார்ஜ் செய்ய முற்பட வேண்டும்.

2 – ஜியோசாவன் செயலியை டவுன்லோடு செய்து, ஜியோ மொபைல் எண் மூலம் சைன்-இன் செய்ய வேண்டும்.

3 – சேவை தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும். இனி சியோசாவன் ப்ரோ சந்தா மூலம் சேவையை பயன்படுத்த துவங்கலாம்.

google news