Connect with us

latest news

ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் நார்மல் டிவியை ஆண்ட்ராய்டு டிவியாக மாற்ற முடியும்..! அதுவும் வெறும் 20 நொடிகளிலா..?

Published

on

tv to smart tv

இந்தப் பதிவில் உங்களது சாதாரண டிவியை ஆண்ட்ராய்டு டிவி ஆக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

சிறப்பம்சம் ஏதுமில்லா ஒரு நார்மல் பயன்ப்படுத்துகிறீர்களா.? வழக்கமாக டிவியை ஸ்மார்ட் டிவி ஆக மாற்ற வேண்டுமெனில் சில ஆயிரங்களை செலவழித்து அமேசானில் கிடைக்கக்கூடிய அமேசான் ஃபயர் ஸ்டிக் கொண்டு ஸ்மார்ட் டிவியாக மாற்றிக் கொள்ள முடியும். அல்லது ஜியோவின் ஸ்மார்ட் செட்டாப் பாக்ஸ் அல்லது டாடா பிங்க் பிளஸ் இதனை பயன்படுத்தினால் மட்டுமே ஸ்மார்ட் டிவியாக மாற்ற முடியும்.

ஆனால் சில ஆயிரங்கள் செலவழிக்காமல் செலவு செய்யாமல் வெறும் 20 நொடிகளில் நார்மல் டிவியை ஆண்ட்ராய்டு டிவியாக மாற்ற முடியும். இன்றைய காலகட்டத்தில் பலரிடம் பொதுவாக வீட்டில் இருக்கக்கூடிய ஒன்று எச்டிஎம்ஐ (HDMI) கேபிள். இதனுடன் ஒரு லேப்டாப் இருந்தால் போதும். வீட்டில் எச்டிஎம்ஐ கேபிள் இல்லையென்றால் அமேசான் மூலமாக வெறும் 179 ரூபாய் கொடுத்து இதனை வாங்கிக் கொள்ளலாம்.

hdmi cable

hdmi cable

கேபிளின் தரம் மற்றும் பிராண்டுகளின் அடிப்படையில் அதன் விலை மாறுபடும். இன்றைய காலகட்டத்தில் கிடைக்கும் லேப்டாப்புக்களில் அனைத்தும் எச்டிஎம்ஐ கேபிள் போர்ட்டை கொண்டு தான் வருகிறது. இதன் மூலம் லேப்டாப்பின் திரை டிவியுடன் இணையும் பொழுது நார்மல் டிவி ஆண்ட்ராய்டு டிவியாக மாறுகிறது.

smart tv

smart tv

* எச்டி எம் ஐ கேபிளின் கேபிலை ஒருபுறம் டிவியுடனும் மறுபுறம் லேப்டாப்பின் உள்ள போர்டுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

 * அதன் பின்பு டிவி ரிமோட்டில் இன்புட்டில் சென்று எச்டிஎம்ஐக்கு மாற்ற வேண்டும்.
இதன் மூலம் லேப்டாப் டிவியுடன் இணைக்கப்படுகிறது. லேப்டாப்பின்திரை டிவியில்        காணப்படும். வீடியோவை ப்ளே செய்தால் டிவியில் படம் காணப்படும். மேலும் டிவி ரிமோட்டின்      உதவி இல்லாமலே லேப்டாப் மூலம் டிவியை கட்டுப்படுத்த முடியும்.

* எடுத்துக்காட்டாக, நெட் ஃப்லிக்ஸில் நீங்கள் ஒரு படம் பார்க்கிறீர்கள் என்றால் லேப்டாப் மூலமாக அதனை தேர்வு செய்து படத்தை டிவியில் காணலாம்.

படத்தின் தரம் எப்படி இருக்கும்..?

smart tv 2

smart tv 2

வீடியோ குவாலிட்டி போதுமானதாக இருந்தாலும் படத்தின் தரம் டிவியின் ரெசல்யூசன் பொறுத்து மாறுபடும். நீங்கள் லேப்டாப் மூலம் டிவியை இணைக்கும் பொழுது பிச்சர் குவாலிட்டியில் சிறிது மாறுபாடு ஏற்படும். இருந்த போதிலும் ஜியோ ஸ்மார்ட் பாக்ஸ் செட்டாப் பாக்ஸ் மூலம் கிடைக்கப்படும் வீடியோ குவாலிட்டியை விட சிறந்ததாக இருக்கும். நீங்கள் சில ஆயிரங்களை கொடுத்து மற்ற சாதனங்களை வாங்குவதை விட ஒரு சில குறைகளுடன் இந்த எளிய செயல்முறை பயனுள்ளதாக விளங்கும். இதன் மூலம் நமக்குப் பிடித்த திரைப்படத்தை எப்போது வேண்டுமானாலும் பெரிய திரையில் கண்டு களிக்கலாம்.

 

9489303810

google news