latest news
சியோமியின் பேட் 6 டேப்லெட் அறிமுகம்..! புதுசா இதுல என்ன இருக்கு தெரியுமா..?
சியோமி நிறுவனம் இந்தியாவில் பேட் 5 டேப்லெட்டின் வெற்றியை தொடர்ந்து பேட் 6யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதன் தொடக்க மாடலான 6ஜிபி ரேம் மற்றும் 128 சேமிப்பு மாடலின் விலை 26,999 எனவும் இதன் உயரிய மாடல் 8ஜிபி ரேம் 256 சேமிப்பின் விலை 28,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ(icici) வங்கி கார்டை பயன்படுத்தி 3000 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதனால் 23,999 மட்டும் 25,999 ரூபாயில் பெறமுடியும். வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் அமேசான் மற்றும் mi.com போன்ற இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் இதனுடன் நிறுவனம் மூன்று விதமான பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. சியோமி ஸ்மார்ட் பென் 5,999 விலையிலும் , கீபோர்ட் 4,999 மற்றும் சியோமி பேட் 6 பின்பக்க உரை 1,499 விலையிலும் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் ஜியோமி பட்-4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கூகுளுடன் அதிவேகமாக இணைப்பு தன்மை பெறும் மற்றும் இதன் விலை 1,399 க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி பேட் 6 சிறப்பம்சங்கள் :
இதன் திரை 11 இன்ச் அங்குல திரையாக வருகிறது. இதனுடன் 144 ஹெட்சில் மிருதுவான தொடுதிரையாக வருகிறது. மேலும் ஐபிஎஸ் எல் சி டி(ips lcd) திரையாக வருகிறது. மேலும் இதுடன் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10+(hdr) வருகிறது.
இதில் அதிவேக செயல்திறனை வழங்கக்கூடிய புதுவித பிராசசர் ஸ்னாப்டிராகன் 870soc மற்றும் அதிவேக ரேம் டைப்பான எல்பிடிடிஆர்(lpddr) 5 ரேம் மற்றும் 128 மற்றும் 256 செமிப்பு வகைகளிலும் கிடைக்கிறது. இதனுடன் நான்கு ஸ்பீக்கர்களைக் கொண்ட டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடனும் வருகிறது.
மேலும் பின்பக்க 13 எம்பி ஒற்றை கேமரா மற்றும் முன்பக்கமாக 8 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 மற்றும் miui 14 உடன் கூடுதல் சிறப்பம்சங்களாக வருகிறது.
மேலும் இது 8840mah பேட்டரி பேக்குடன் வருகிறது. இதை அதிவேகமாக சார்ஜ் செய்ய 33 வாட் சார்ஜர் உடன் வருகிறது. யூஎஸ்பி-C வடிவில் இதன் சார்ஜ் வருகிறது. இதனை டிவியுடன் இனைத்து 4k தொழில்நுட்பத்துடன் விடியோக்களை கண்டு மகிழலாம்.
இதனுடன் அதிநவீன வசதிகளாக வைபை சிக்ஸ்(wifi 6) மட்டும் ப்ளூடூத் 5.2 போன்றவற்றுடன் வருகிறது.