Connect with us

latest news

வாட்ஸ்அப்பில் இரண்டு புதிய அம்சங்கள்.. எப்போ கிடைக்கும் தெரியுமா?

Published

on

whatsapp

வாட்ஸ்அப் செயலியில் சேனல்ஸ் அம்சம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தனிப்பட்ட மற்றும் நம்பத்தகுந்த முறையில் மிகமுக்கிய அப்டேட்களை தெரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பெற முடியும். தகவல் பரிமாற்ற முறையில் புதிய அம்சத்தை தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தை வழங்க இருக்கிறது.

புதிய அம்சம் சேனல் நோட்டிஃபயர் (Channel Notifier) என்று அழைக்கப்படுகிறது. இத்துடன் வாட்ஸ்அப் விண்டோஸ் பீட்டா வெர்ஷனில் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வழங்கப்பட இருக்கிறது. புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை WaBetaInfo வெளியிட்டு உள்ளது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.12.20 – சேனல் நோட்டிஃபயர் :

வாட்ஸ்அப் பீட்டா 2.23.12.20 வெர்ஷனில் சேனல் நோட்டிஃபயர் எனும் அம்சம் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் மற்றும் கொலம்பியாவில் சேனல் அம்சம் வழங்கப்பட்டு விட்ட நிலையில், மற்ற பகுதிகளில் வசிப்போர் இந்த அம்சத்தை இன்வைட் லின்க் மூலம் பெற முயற்சித்து வருகின்றனர்.

WA-Channel-Notifier-Testing

WA-Channel-Notifier-Testing

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சம் வழங்குவதை பற்றிய தகவலை நோட்டிஃபிகேஷன் மூலம் வழங்குகிறது. புதிய அப்டேட்டில் “Notify Me” பட்டன் இடம்பெற்று உள்ளது. இதற்கு பயனர்கள் சைன்-அப் செய்து கொண்டால் புதிய சேனல் அம்சம் வழங்குவது பற்றிய நோட்டிஃபிகேஷன் அவர்களுக்கு அனுப்பப்படும்.

வாட்ஸ்அப் விண்டோஸ் பீட்டா 2.2322.1.0 – ஸ்கிரீன் ஷேரிங் :

வாட்ஸ்அப் செயலியில் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வழங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த அம்சம் விண்டோஸ் 2.2322.1.0 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. முன்னதாக இதே அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா வெர்ஷில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்கிரீன் ஷேரிங் மூலம் வீடியோ கால் செய்யும் போது, பயனர்கள் தங்களது சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கான ஆப்ஷன் கன்ட்ரோல் பேனலின் கீழ்புறம் இடம்பெற்று இருக்கிறது.

WA-Screen-Sharing-Windows-Beta

WA-Screen-Sharing-Windows-Beta

ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது குறிப்பிட்ட விண்டோ அல்லது முழு திரை என பயனர் விரும்பியவற்றை மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் பயன்படுத்தும் போது பயனர் தரவுகள் திருடப்படும் அபாயம் அதிகம் ஆகும். ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது, எப்போது வேண்டுமானாலும், அதனை நிறுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதற்கு “Stop Sharing Screen” பட்டனை க்ளிக் செய்தாலே போதும்.

எப்போது கிடைக்கும்?

சேனல் நோட்டிஃபயர் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் செயலியின் எதிர்கால வெர்ஷனில் பீட்டா டெஸ்டர்களுக்கு முதலில் வழங்கப்படும். ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் விண்டோஸ் பீட்டா வெர்ஷனில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. வரும் நாட்களில் இந்த அம்சம் மேலும் பலருக்கு வழங்கப்பட இருக்கிறது.

google news