automobile
எதிர்பாராத மைலேஜ் தரும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்..! 100சிசி பிரிவின் சிறந்த பைக்கா.?
இந்தியாவின் இருசக்கர வாகங்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக டிவிஎஸ் விளங்குகிறது. குறைந்த விலையில் மக்களை திருப்தியாக்கும் அளவிற்கு தரமான வண்டிகளை தயாரித்து வழங்குகிறார்கள். தற்போது மக்கள் இருசக்கர வாகங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது குறைந்த பெட்ரோலில் அதிக தூரம் பயணக்குமா.? என்றுதான். அதற்கு ஏற்ப நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறார்கள். அதில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 80 கிலோ மீட்டர் வரை செல்லும் என நிறுவன தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு இந்த ஸ்டார் சிட்டி ப்ளஸ் டிவிஎஸ் நிறுவனம் இருந்து வெளியிட்ட நாள் முதல் இன்று வரை நல்ல விற்பனையை உள்ளது. அதற்குக் காரணம் இதன் அழகான தோற்றமும் சிறந்த மைலேஜ் தான். சாதாரண வடிவமைப்பும் குறைந்த எடையும் அதாவது சுமார் 116 கிலோ கிராம் தான் இதன் மொத்த எடையாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் வளைந்து சுலபமாக செல்ல முடியும்.
இந்த வண்டியின் எல்இடி முகப்பு விளக்குடன் வருகிறது மேலும் அனலாக் மற்றும் டிஜிட்டல் வடிவிலான கண்சோல் கொண்டு வருகிறது. முகப்பு விளக்கு பக்கத்தில் மொபைலை சார்ஜ் செய்வதற்காக யூஎஸ்பி பொட்டையும் வழங்குகிறது.
எஞ்சின் :
இந்தியாவின் பிஎஸ்-6 கொள்கையின்படி 110 cc யுடன் வருகிறது. இதன் அதிக வெப்பமாதலை தடுக்க காற்று மூலம் குளிர்விக்கப்படும். இந்த எஞ்சின் ஒற்றை சிலிண்டர் கொண்டு வருகிறது. இதனால் வெளிப்படுத்தக்கூடிய பவர் 8.1 பிஎஸ் ஆகவும், 8.7nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த 4-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் வருகிறது. இதன் உச்ச வேகமாக 90kmph கிலோ மீட்டர் வரை தொடும்.
மைலேஜ் :
டிவிஎஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்டார்ஸ் சிட்டி ப்ளஸ் ஒரு லிட்டருக்கு 70 முதல் 86 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கிறது. ஸ்டார் சிட்டி ப்ளஸ் இன் மொத்த எரிபொருள் கொள்ளளவு 10 லிட்டர் ஆகும்.
விலை :
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ட்ரம் மட்டும் முன்பக்க டிஸ்க் பிரேக்குகளுடன் வருகிறது. இதன் விலை சுமார் 76,000 – 79,000 ரூபாய் எக்ஸ்சோரும் விலையில் கிடைக்கப் பெறுகிறது. மேலும் இந்த வண்டி பஜாஜ் பிளாட்டினா,ஹீரோ பேஷன் ப்ரோ,ஹோண்டா லிவோ போன்றவற்றிற்கு கடுமையான போட்டியாளராக விளங்குகிறது.