automobile
இப்போதைக்கு மின்சார கார்களை இறக்கமாட்டோம்..! வேற லெவல் பிளான் போடும் ரெனால்டு..!
ஐரோப்பிய கார் உற்பத்தியாளர்களான ரெனால்ட் நிறுவனம் தற்பொழுது இந்தியாவில் அதன் விற்பனயை 10 லட்சம் கார்களை விற்று புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சென்னையில் உள்ள ரெனால்ட்-நிசான் தொழிற்சாலையில் இந்நிறுவனம் வருடத்திற்கு 4,80,000 கார்களை உற்பத்தி செய்கிறது. இதில் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை தயாரிக்கும் வசதிகளை கொண்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் 10 லட்சம் கார்களை விற்பனை செய்ததை கொண்டாடியது.
இந்த கொண்டாட்டத்தின் பொழுது ரெனால்ட் நிறுவனம் மேலும் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக மின்சாரக்கார்களை பற்றிய அறிவிப்பும் வெளிவந்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு 3 புதிய மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன. தற்பொழுது விற்பனையில் உள்ள க்விட்,கைகர் மற்றும் டிரைபர் கார்கள் அனைத்து மக்களையும் கொண்டு சேரும் விதத்தில் குறைந்த விலை விற்க்கப்பட்டு வருகிறது.
அதன்காரணமாக நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அதேபோல வரும் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்படும் மூன்று எலக்ட்ரிக் கார்களும் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தில் விற்பனையில் உள்ள கார்களை விட பெரிதாகவும் 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தையும் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் எங்களுடைய தற்போது இலக்காக இருப்பது 2030 இந்தியா முழுவதும் நம்பகத்தன்மையான வாடிக்கையாளர்களே பெறுவோம் என நம்பிக்கை கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஆண்டுக்கான திட்டமானது ஒரு லட்சம் கார்களை விற்பது தான் அதில் 84,000 கார்கள் உள்நாட்டிலும் 20,000 கார்கள் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய திட்ட விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ரெனால்ட் நிசான் கூட்டணி கூட்டணியில் 6 புதிய கார்கள் வரவுள்ளது இதற்காக சுமார் 5300 கோடியை முதலீடு. இந்தியாவில் ரெனால்ட் நிசான் கூட்டணியில் கார்களை தயாரித்து சார்க் நாடுகள்,ஆசிய பசுபிக் நாடுகள் இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் தென்னாபிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகளில் கார்களை ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.