automobile
இதுதான் ஹூண்டாய் முதல் பட்ஜெட் மின்சார காரா..? எப்போ வரப்போகுதுனு தெரியுமா..?
அனைத்து நிறுவனங்களும் தற்போது மின்சார கார்களை உருவாக்கத்தில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அப்படி நிறுவனங்கள் உற்பத்தி செய்த வாகனங்களை போட்டி போட்டுக் கொண்டு சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனம் முன்னதாக இந்த வரிசையில் 2 கார்களை வைத்துள்ளது. கோனா மற்றும் அயானிக்-5 ஆகிய இரண்டு கார்களும் தற்போது சந்தையில் விற்பனையில் உள்ளது.
அறிமுகப்படுத்தியபடுத்திய நாள் முதல் இன்று வரை இதன் விலை அதிகமாக உள்ளது. இது மக்களிடையே கவனத்தை ஈர்க்க தவறியது. இதனால் ஹூண்டாய் தற்போது மக்கள் வாங்கக்கூடிய விலையில் மின்சார கார்களை தயாரிக்க உள்ளது. அதற்கான முயற்சியில் தற்பொழுது பணி செய்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் அதிக அளவு விற்கப்பட்டு வரும் க்ரிட்டாவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் ஹூண்டாய் நிறுவனத்தால் க்ரிட்டா வை முதன்முதலாக சோதையின் போது சாலையில் காணப்பட்டது. அது தற்போது விற்பனையில் உள்ள காரை போலவே அடிப்பகுதியில் பேட்டரி பேக் உடன் இணைத்து காணப்பட்டது. சாலையின் சோதனையின் போது அந்த வாகனத்தில் புகை போக்குகளே இல்லாமல் பெட்ரோல் காரை போன்று எவ்வித சத்தமில்லாமலும் முழுவதுமாக பேட்டரியில் இயங்கும் காராக இருந்தது. வடிவமைப்பில் சிறிது கூட மாற்றம் இன்றி இப்பொழுது விற்பனையில் இருக்கும் அதே காரில் தான் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் வாகனம் அறிமுகப்படுத்தும் பொழுது அதன் உருவ அமைப்பில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இதன் வருகையை தற்போது விற்பனையில் இருக்கும் க்ரிட்டாவின் பேஸ்-லிப்ட் க்கு பின்பு இதனைப் பற்றிய க்ரிட்டா ஈ.வி பற்றி தகவலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உள்ளமைப்பு அது நவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது. வேதத்தை கட்டுப்படுத்த அதில் மாறுபாடுகள் செய்து புதிய பிரேக்கிங் வசதியுடன் வருகிறது. முழுவதுமாக டிஜிட்டல் வடிவிலான கண்சோல், சூழ்நிலைக்கேற்ப வாகனத்தை ஓட்ட இயக்க முறைகள் கொண்டும் வருகிறது. இதனுடன் மிகப்பெரிய சன்ரூப் அம்சத்தையும் கொண்டுள்ளது.
இதன் அறிமுகம் எப்போது..?
க்ரிட்டா மின்சார வாகனம் தற்பொழுது அதனை முழுவதும் சோதிக்கும் வகையில் தான் உள்ளது . ஹூண்டாய் அதன் பேட்டரி மற்றும் மோட்டார்களை பல வித சோதனையின் அடிப்படையில் பரிசோதித்து வருகிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்த உடன் கிரட்டா அடுத்த கட்ட நகர்வை பெறும். அதன் பின்பு 2025 ஆம் ஆண்டு இதனை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தற்போது உள்ள கோணா மற்றும் அயானிக்-5 கார்கள் மட்டும் சந்தையில் விற்பனையில் இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.