Connect with us

latest news

ரூ. 70 ஆயிரம் பட்ஜெட்டில் டாப் கிளாஸ் லேப்டாப்கள் பட்டியல்!

Published

on

Laptops-Under-Rs-70000

ஆன்லைனில் வாங்குவதற்கு சிறப்பான லேப்டாப்களை தேடி வருகின்றீர்களா? ரூ. 70 ஆயிரம் பட்ஜெட்டில் தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் லேப்டாப்களில் தலைசிறந்த மாடல்கள் பட்டியலை இங்கு தொகுத்து இருக்கிறோம். ரூ. 70 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் லேப்டாப்களை பிஸ்னஸ் மற்றும் கேமிங் லேப்டாப் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற மாடல்களில் தேர்வு செய்யும் ஆப்ஷன் உள்ளது.

ஹெச்பி, அசுஸ், லெனோவோ, டெல் என பல்வேறு பிராண்டுகளில் ரூ. 70 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப் மாடல்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம். இங்கு பட்டியலிடப்பட்டு இருக்கும் லேப்டாப்களில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும் மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

லெனோவோ ஐடியாபேட் ஸ்லிம் 5 | விலை ரூ. 66 ஆயிரம் :

lenovo-ideapda-slim-5

lenovo-ideapda-slim-5

ரூ. 70 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் லெனோவோ ஐடியாபேட் ஸ்லிம் 5 AMD ரைசன் 7 5700U 5th Gen பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்த மாடலை கேமிங் மற்றும் பிஸ்னஸ் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகின்றது. இதில் 15.6 இன்ச் ஸ்கிரீன், 16 ஜிபி ரேம், 512 ஜிபி SSD வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் லேப்டாப்-ஐ ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.

ஹெச்பி 15s 12th Gen லேப்டாப் | விலை ரூ. 57 ஆயிரம் :

hp-15s-12th-gen

hp-15s-12th-gen

ஆன்லைன் வாங்குவதற்கு இந்த ஹெச்பி மாடல் லேப்டாப் சிறப்பான தேர்வாக இருக்கும். இதில் 12MB L3 கேச்சி, 10 கோர்கள், 12 திரெட்கள், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை 16 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இத்துடன் 512 ஜிபி SSD உள்ளது. இந்த லேப்டாப்பில் ஃபுல் சைஸ் கீபோர்டு, மல்டி-டச் டச்பேட் உள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் லேப்டாப்-ஐ 45 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

Mi நோட்புக் அல்ட்ரா | விலை ரூ. 64 ஆயிரம் :

Mi-NoteBook-Ultra

Mi-NoteBook-Ultra

சக்திவாய்ந்த பிஸ்னஸ் லேப்டாப் வேண்டுமெனில் Mi நோட்புக் அல்ட்ரா சிறப்பான தேர்வாக இருக்கும். இதில் உள்ள 11th Gen Intel Tiger Lake Core i5-11300H பிராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி SSD வழங்கப்பட்டு இருக்கிறது. குறைந்த எடை, மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் இந்த லேப்டாப் அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கு ஏற்றதாக இருக்கும்.

ஹெச்பி பெவிலியன் 14 12th Gen லேப்டாப் | விலை ரூ. 68 ஆயிரத்து 500 :

hp-pavilion-14-12th-gen

hp-pavilion-14-12th-gen

ரூ. 70 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் மற்றொரு சிறந்த லேப்டாப் இந்த ஹெச்பி பெவிலியன் 14 மாடல் ஆகும். இந்த லேப்டாப் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் 14 இன்ச் மைக்ரோ-எட்ஜ் மற்றும் ஆன்டி கிளேர் டிஸ்ப்ளே உள்ளது. இத்துடன் இன்டெல் கோர் i5-1235U பிராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி SSD, கைரேகை சென்சார், பேக்லிட் கீபோர்டு உள்ளது.

ஏசர் ஆஸ்பயர் 5 கேமிங் லேப்டாப் | விலை ரூ. 61 ஆயிரம் :

acer-aspire-5

acer-aspire-5

ரூ. 70 ஆயிரம் பட்ஜெட்டில் சிறப்பான கேமிங் லேப்டாப் வாங்க நினைப்பவர்கள் இந்த மாடலை தேர்வு செய்யலாம். இந்த லேப்டாப்பில் 12th Gen Intel Core i5-1240P பிராசஸர், 16 ஜிபி ரேம், 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி, 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள டச்பேட் அகலமாக இருப்பதால் கேமிங் செய்ய அதிக சவுகரியமாக உள்ளது.

google news