Connect with us

automobile

உங்க வண்டியின் மைலேஜ் குறைகிறதா..? ஒரு வாரம் இந்த டிப்ஸ் பாலோ பண்ணா போதும் வேறலெவல் மைலேஜ் கிடைக்கும்..!

Published

on

mileage tips

தற்பொழுது பெட்ரோல் விலை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அளிக்கிறது. நாளுக்கு நாள் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கிறது. இதன் காரணமாக மக்கள் அதிக மைலேஜ் கிடைக்கக்கூடிய பைக் விலை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வாங்கிய பின்பு நிறுவனங்கள் தரப்பில் இருந்து உறுதியளிக்கப்படும் மைலேஜ் எண்கள் நடைமுறைக்கு வரும் பொழுது அந்த எண்கள் கிடைப்பதில்லை. அதிக மைலேஜ் தரும் வாகனங்களை வாங்கியும் வண்டி ஓட்டும் பொழுது செய்யப்படும் ஒரு சில தவறுகளினால் மைலேஜ் குறையும். ஒரு சில குறிப்புகளை பாலோ பண்ணா போதும் ஒரு வாரத்தில் உங்களது வாகனத்தின் மைலேஜ் உயரக்கூடும்.

 

mileage tips

mileage tips

உங்கள் வாகனங்களை மைலேஜ் அதிகரிக்க ஒரு சில குறிப்புகள் இதோ :

வாகனங்களை அதிக நேரம் வெயிலில் நிறுத்துவதாலும் அதன் பாகங்கள் சேதமடைந்து மைலேஜ் குறைய நேரிடும். முடிந்தவரை வாகனங்களை நிழல் இருக்கும் இடங்களில் நிறுத்தி வைப்பது நல்லது. சீரான கால இடைவெளியில் அவ்வப்போது பழுது நீக்கும் இடம் சென்று சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும். சர்வீஸ் மூலம் உதிரிபாகங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான வேகத்தில் வாகனங்களை இயக்குவது நல்லது. ஏனெனில் அப்பொழுதுதான் குறைந்த அளவு பெட்ரோல் செலவு செய்யப்படும்.

இதன் காரணமாக பெட்ரோல் தேவையில்லாமல் வீணாக்கப்படுவது தடுக்கப்பட்டு அதிக மைலேஜ் கிடைக்கிறது. வண்டி சாலையில் ஓடும்பொழுது தேவையில்லாமல் கிளட்ச்சை பிடித்து ஓட்டுவது தவிர்க்க வேண்டும். அடிக்கடி கியர் மாற்றுவதனாலும் மைலேஜ் குறை நேரிடும். நகரங்களில் அதிகமாக ஓட்டும் பொழுது ஆங்காங்கே சிக்னல் நிறுத்தங்களில் நிறுத்தும் பொழுது வாகனங்களின் என்ஜினை அனைத்து வைப்பது நல்லது. இதனால் தேவையில்லாமல் ஏற்படும் பெட்ரோல் இழப்பை தவிர்க்கலாம். இதன் மூலம் மைலேஜில் ஏற்படும் வேறுபாடுகளை நம்மால் காண முடியும்.

வண்டியை குறைந்த ஆர்பிஎம்மில்(rpm) சீரான வேகத்தில் ஓட்டுவது நல்லது. அதிக ஆர்பிஎம்மில்(rpm) இயக்கும்போது அதிக எரிபொருளை எடுத்துக் கொள்ளும். மைலேஜ் இழப்பு நேரிடும். நெடுஞ்சாலை நீண்ட தூரம் பயணிக்கும் பொழுது ஆக்சிலேட்டரை தொடர்ச்சியாக பிடிக்காமல் சிறிது இடைவெளி விட்டு பயன்படுத்தினால் மைலேஜ் சிறப்பாக கிடைக்கும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *