govt update news
இனி நோ பார்க்கிங்ல வண்டிய விடாதீங்க..புதிய விதிமுறைகளை கொண்டு வந்த மத்திய அரசு..
இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. இதற்கு காரணம் நாட்டில் பெருகிவரும் வாகனங்களே. இந்த நெரிசல்களின் மூலம் பெரும்பாலான இடங்களில் விபத்தும் ஏற்படுகின்றன. எனவே இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அமைச்சர் நிதி கட்காரி ஒரு புதிய விதிமுறையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த விதிமுறை வாக ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவ்வாறான விதிமுறகளை கொண்டு வருவதினால் வாகன ஓட்டிகளிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படும் எனும் நோக்கில் இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளனர்.
இதன்படி இனி பார்க்கிங் பன்னுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் வாகனங்களை விட்டால் அந்த நபருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய விதியினை கூடிய விரைவில் சட்டமாக்க முயற்சிகல் எடுப்பதாகவும் கூறியுள்ளார். இதில் ஒரு புது தன்மை என்னவென்றால் எந்த நபர் தவறாக பார்க் செய்யும் நபரினை புகைப்படம் எடுத்து காவல்துறைக்கு அனுப்புகிறாரோ அவருக்கு ரூ. 500 அன்பளிப்பாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது பெரும்பாலான வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் வாகன நெரிசலை குறப்பதர்கு இது போன்ற விதிமுறைகளை கொண்டு வருவது கண்டிப்பாக நன்மை பயக்ககூடிய செயலாகவே அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இனிமேலாவது நோ பார்க்கிங்ல வாகனங்களை நிறுத்தாதீர்கள்.