Connect with us

latest news

இனி அந்த தொல்லை இல்லை.. ஐபோன்களுக்கென புது காப்புரிமை பெற்ற ஆப்பிள்!

Published

on

iPhone-14-Pro

ஆப்பிள் நிறுவனம் எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் மாடல்களில் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் உற்பத்தியில், ‘ஸ்பேஷியல் கம்போசைட்’ பொருட்களை பயன்படுத்துவதற்காக ஆப்பிள் நிறுவனம் புதிய காப்புரிமை பெற்று இருக்கிறது. இந்த காப்புரிமையை அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் வழங்கி இருக்கிறது.

புதிய காப்புரிமை பற்றிய தகவலை பேடன்ட்லி ஆப்பிள் கண்டறிந்து தெரிவித்துள்ளது. மற்ற மின்சாதன பொருட்களை போன்றே ஆப்பிள் நிறுவன ஐபோன்கள், ஐபேட்கள், வாட்ச்கள் மற்றும் மேக் சாதனங்களிலும் ஸ்கிராட்ச் எனப்படும் உராய்வு காரணமாக கீறல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பயனர்கள் ப்ரோடெக்டிவ் கேஸ்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலைக்கு முடிவு கட்டும் வகையில், ஆப்பிள் பயனர்கள் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் வசதி கொண்ட பேக் பேனலை உருவாக்கி வருகிறது.

iPhone-14-Pro

iPhone-14-Pro

இது பயன்பாட்டுக்கு வரும் போது பயனர்கள் தங்களது சாதனங்களுடன் ஸ்மார்ட்போன் கேஸ் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. காப்புரிமை தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் வசதி கொண்ட பேக் பேனலை உருவாக்கி வருகிறது. இதற்காக உராய்வுகளை எதிர்கொள்ளும் பொருட்களை கொண்டு பேக் பேனலை உருவாக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

இவை ஐபோனின் சேசிஸ் உடன் பொருத்தப்பட்டு விடும். காப்புரிமை தகவல்களின் படி ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் வசதியை வழங்கும் ஸ்பேஷியல் கம்போசைட்களை ஸ்டீபன் லின்ச், டீடோர் டபோவ் மற்றும் க்ரிஸ்டோஃபர் பிரெஸ்ட் ஆகியோர் இணைந்து உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆப்பிள் நிறுவன பொறியாளர்கள் ஆவர்.

காப்புரிமை தரவுகளின் படி ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்கள் எவை என்பதை பட்டியலிட்டுள்ளது. இதில் பிளாஸ்டிக் பாகங்கள் ரேடியோ கனெக்டிவிட்டியை பாதிக்காது, மேலும் அது ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் என்று ஆப்பிள் விளக்கம் அளித்திருக்கிறது. மெட்டலில் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது என்ற போதிலும், அது ரேடியோ கனெக்டிவிட்டியை பாதிக்கும். இதேபோன்று செராமிக்-கும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் ஆனால், கனெக்டிவிட்டியை பாதிக்கும்.

ஸ்பேஷியல் கம்போசைட் பொருள் என்றால் என்ன ?

ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் தன்மை, மிகக் குறைந்த இடர்பாடு மற்றும் தலைசிறந்த உறுதித்தன்மை கொண்ட மெட்டல் மற்றும் செராமிக் கம்போசைட்களே ‘ஸ்பேஷியல் கம்போசைட்’ என்று அழைக்கப்படுகிறது. ஸ்பேஷியல் கம்போசைட் என்ற சப்ஸ்டிரேட் பொருள் மோல்டு செய்யக்கூடிய மேட்ரிக்ஸ் ஆகும். தற்போது டிஸ்ப்ளே மீது எளிதில் ஸ்கிராட்ச் ஆகாமல் இருக்க ஆப்பிள் நிறுவனம் க்ரிஸ்டல் ஷீல்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

தற்போது காப்புரிமை பெற்று இருக்கும் புதிய ஸ்பேஷியல் கம்போசைட் மூலம் ஐபோன்களின் பேக் பேனலும் பாதுகாக்கப்படும். புதிய வகை பேக் பேனலுக்கான காப்புரிமை தற்போது தான் பெறப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இது விற்பனைக்கு வரும் ஐபோன் மாடல்களில் வழங்குவதற்கு மேலும் சில காலம் ஆகும்.

google news