job news
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஜிம் இன்ஸ்ட்ரக்டர் வேலை..! உடனே விண்ணப்பிங்க..!
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India – SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984இல் நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு அமைப்பாகும்.
தற்பொழுது, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரைத் (Gym Instructor) தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 50 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
- உடற்பயிற்சி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது B.P.Ed அல்லது ACSM, NASM, National Skill Development Corporation (NSDC) போன்ற தேசிய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/நிறுவனம் மூலம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- உடற்பயிற்சி உபகரணங்கள், உடற்பயிற்சி போக்குகள் மற்றும் ஆரோக்கிய அறிவு ஆகியவற்றைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
- ஜிம் பயிற்றுவிப்பாளராக / தனிப்பட்ட பயிற்சியாளராக குறைந்தபட்சம் 01 வருட தொழில்முறை அனுபவம் தேவை.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் நேர்காணலுக்கு அசல் ஆவணங்களை (புகைப்பட நகலுடன்) கொண்டு வர வேண்டும்.
- நிர்வாகி அலுவலகம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு வளாகம், லோதி சாலை, புது தில்லி-110003
- நேர்காணல் ஜூலை 7ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும்.
சம்பள விவரம்:
உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.