govt update news
பழைய வாக்காளர் அட்டை வைத்துள்ளீர்களா?..PVC கார்டா வேணுமா?.. எவ்வாறு விண்ணப்பிப்பது?..
இந்திய நாட்டில் பிறந்த குடிமகன் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருத்தல் அவசியம். இதனை வாக்களிக்க மட்டுமல்லாமல் நாம் தேர்வு எழுத செல்லும்போது, வங்கி கணக்கினை தொடங்கும் போது என பல அத்தியாவசியமான தேவைகளுக்கு ஆவணமாக கூட பயன்படுத்தலாம். இந்த வாக்காளர் அடையாள அட்டை PVC வடிவில் தற்போது நாம் பெற்று கொள்ளலாம். அதனை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்.
- இதனை விண்ணப்பிப்பதற்கு முதலில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் நமது பெயரில் ஒரு அக்கெளண்டை உருவாக்கவும். அந்த கணக்கில் லாகின் செய்யவும்.
- பின் அதன் முகப்பு பக்கத்தில் உள்ள E-EPIC Download என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- பின் அதனுள் நுழைந்த பின் அதில் நமது வாக்காளர் அடையாள எண் மற்றும் நமது மாநிலத்தை கொடுத்து Submit என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்போது நமது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து பின் நமது மொபைலுக்கு வரும் OTPயை கொடுத்து Verify என்ற பட்டனை அழுத்தவும்.
- பின் Download என்ற பட்டனை அழுத்தினால் நம்க்கு இ.வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
— கார்டினை பெற்வது எவ்வாறு:
- இதனை விண்ணப்பிப்பதற்கு முதலில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள ஃபார்ம் 8 ஐ பட்டனை அழுத்தவும்.
- பின் அது லாகின் செய்யும்படி கேட்கும்.
- லாகின் செய்தபின் நமது மாநிலம், நமது மொழி மற்றும் இதர தகவல்களை கொடுக்கவும்.
- பின் Submit என்ற பட்டனை அழுத்தவும் நமக்கு ஒரு ஒப்புகை தகவலும் அதனும் அதற்கான எண்ணும் தெரியும்.
- பின் சில நாட்களில் நமது வீட்டிற்கே PVC வடிவிலான வாக்காளர் அட்டை வந்து சேரும்.
இந்த வாக்காளர் அட்டையை விண்ணப்பிப்பதற்கு நாம் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.