Connect with us

job news

மாதம் ரூ.1,00,000 சம்பளம்..எஸ்பிஐ வங்கியில் ஆலோசகர் வேலை..! விண்ணப்பிக்கும் முறை இதோ..!

Published

on

SBI Recruitment

பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India – SBI) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும்.

தற்பொழுது, எஸ்பிஐ வங்கி காலியாக உள்ள ஆலோசகர் (மோசடி இடர் மேலாண்மை) பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளைர்களை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் மற்றும் ஒப்பந்த காலம்:

எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஆலோசகர் (மோசடி இடர் மேலாண்மை) பணிக்கு 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதால், தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் 2 ஆண்டுகளுக்கு பணியில் நியமிக்கப்படுவார்.

விண்ணப்பதாரர் வயது:

ஆலோசகர் (மோசடி இடர் மேலாண்மை) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 63 க்கு மேல் இருக்க கூடாது. வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அல்லது மாநில காவல்துறை அதிகாரியாக இருக்க வேண்டும்.
  • சிபிஐ அதிகாரி / உளவுத்துறை அதிகாரி / சிஇஐபி அதிகாரி மற்றும் விஜிலென்ஸ் / பொருளாதார குற்றங்கள் / சைபர் கிரைம் துறைகளில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர் எஸ்பிஐ வங்கியின் https://bank.sbi/careers அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு கொடுக்கப்பட்டுள்ள Application Form என்ற ஆன்லைன் விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் கவனமாக விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
  • விண்ணப்பம் சேமிக்கப்படும் போது, ஒரு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் கணினியால் உருவாக்கப்பட்டு திரையில் காட்டப்படும்.
  • விண்ணப்பதாரர் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும். பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அவர்கள் சேமித்த பயன்பாட்டை மீண்டும் திறக்கலாம் மற்றும் தேவைப்பட்டால் விவரங்களைத் திருத்தலாம்
  • சேமிக்கப்பட்ட தகவல்களைத் திருத்தும் இந்த வசதி மூன்று முறை மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • விண்ணப்பம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டவுடன், விண்ணப்பதாரர் அதைச் சமர்ப்பித்து ஆன்லைன் கட்டணத்தைச் செலுத்தத் தொடர வேண்டும்.
  • ஆன்லைனில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் கணினியின் பிரிண்ட்அவுட் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

விண்ணப்பக்கட்டணம்: 

ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது/ஓபிசி/ஈடபிள்யூஎஸ் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/PwBD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

ஆலோசகர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கான விண்ணப்பபடிவத்தை ஜூலை 10ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

google news