job news
மாதம் ரூ.31,000 சம்பளத்தில் காரைக்குடியில் வேலை..நேர்காணல் மட்டுமே..! உடனே போங்க..
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electrochemical Research Institute – CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும். மின் வேதியியல் ஆய்வு மையம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் அசோசியேட்-I (Project Associate-I) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
ப்ராஜெக்ட் அசோசியேட்-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆகும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/ பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை மற்றும் சம்பள விவரம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர் காரைக்குடியில் நடக்கும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்படுவார். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
நேர்காணல் தேதி:
ப்ராஜெக்ட் அசோசியேட்-I பணிக்கு ஜூன் 22 மற்றும் 23 தேதிகளில் CECRI – CECRI, காரைக்குடியில் நேர்காணல் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.