latest news
மீண்டும் பழைய ஸ்டைல்.. விரைவில் ஸ்மார்ட்போன் பேட்டரியை எளிதில் மாற்றிடலாம்!
ஸ்மார்ட்போன்களில் மாற்றக்கூடிய பேட்டரிகள் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். உலகம் முழுக்க இது நடைமுறைக்கு வருமா என்பது தற்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனாலும், ஐரோப்பாவில் இது அமலுக்கு வர இருக்கிறது. ஐரோப்பிய யூனியன் பிறப்பித்து இருக்கும் புதிய விதிகளில், அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பேட்டரிகளை மாற்றும் வசதி வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த விதிகளின் காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், தங்களின் பெரும்பாலான சாதனங்களின் டிசைனை முழுமையாக மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்து வகையான பேட்டரிகள் அதிக திறன் கொண்டிருக்கவும், உறுதியாதகவும், நீண்ட காலம் உழைக்கும் வகையில் இருக்க செய்வதற்கான முயற்சியாக ஐரோப்பிய யூனியன் புதிய விதிகளை அறிவித்து இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் பில்ட்-இன் பேட்டரிகள் வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தற்போதுள்ள டிசைனை முழுமையாக மாற்றி, பேட்டரிகளை எளிதில் கழற்றி மாற்றும் வகையில் வழங்க வேண்டும். புதிய விதிகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதை குறைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
2023 ஆண்டிற்குள் போர்டபில் பேட்டரிகளின் கழிவுகளில் 45 சதவீதம் சேகரிக்கப்பட வேண்டும். 2027 ஆண்டு பாழாகி போன பேட்டரிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழுவுகள் 50 சதவீதமாகவும், 2031 ஆண்டு இது 80 சதவீதமாகவும் அதிகப்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஸ்மார்ட்போன்களும் லித்தியம் அயன் பேட்டரி அதாவது லித்தியம் பாலிமர் பேட்டரிகளை பயன்படுத்தி வருகின்றன.
புதிய விதிகளை ஆதரிக்கும் வகையில் 587 வாக்குகளையும், எதிர்த்து வெறும் ஒன்பது வாக்குகளும் கிடைத்துள்ளன. தற்போது இந்த விதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இது பயன்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் 3.5 ஆண்டுகள் வரை ஆகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விதி அமலுக்கு வரும் பட்சத்தில் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், ஐரோப்பிய சந்தைக்கென தங்களது ஸ்மார்ட்போன்களை எப்படி திட்டமிடும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
முன்னதாக பல சமயங்களில் ஐரோப்பிய யூனியன் ஸ்மார்ட்போன் பிரான்டுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அந்த வகையில், ஐரோப்பிய யூனியன் ஆப்பிள் நிறுவனத்தை லைட்னிங் போர்ட்-க்கு மாறஅறாக யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்க வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.