Connect with us

latest news

இனி எந்நேரமும் கேமிங் மோட் தான்.. அசுஸ் கையடக்க கேமிங் கன்சோல் இந்தியாவில் அறிமுகம்!

Published

on

ASUS-ROG-Ally-Featured-Img

அசுஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று இந்திய சந்தையில் தனது கையடக்க கேமிங் கன்சோல் மாடலை அறிமுகம் செய்தது. அசுஸ் ROG Ally என்று அழைக்கப்படும் புதிய கேமிங் கன்சோல் வின்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகமான முதல் கையடக்க கேமிங் கன்சோல் இது ஆகும்.

ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கும் அசுஸ் ROG Ally கையடக்க கேமிங் கன்சோல் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் அசுஸ் ROG Ally மாடலின் விற்பனை அடுத்த மாதம் தான் துவங்க இருக்கிறது. புதிய கையடக்க கேமிங் கன்சோல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ASUS-ROG-Ally

ASUS-ROG-Ally

அசுஸ் ROG Ally கேமிங் கன்சோல் 7 இன்ச் 1080 பிக்சல் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் AMD Ryzen Z1 Extreme APU, 16 LPDDR5 ரேம், அதிகபட்சம் 512 ஜிபி NVMe M.2 2230 PCIe ஜென் 4 ஸ்டோரேஜ் மற்றும் UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

ASUS-ROG-Ally 2

ASUS-ROG-Ally 2

இந்த கேமிங் கன்சோலின் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் DXC மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதில் உள்ள டிஸ்ப்ளே ஃபிரீசின்க் பிரீமியம், டால்பி விஷன் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ASUS-ROG-Ally 3

ASUS-ROG-Ally 3

வின்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கும் அசுஸ் ROG Ally கேமிங் கன்சோலில், 1x 3.5mm காம்போ ஆடியோ ஜாக், 1x ROG XG மொபைல் இன்டர்ஃபேஸ், யுஎஸ்பி டைப் சி காம்போ போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் A B X Y பட்டன்கள், D-பேட், L & R ஹால் எஃபெக்ட் அனலாக் ட்ரிகர்கள், L & R பம்ப்பர் வியூ பட்டன், மெனு பட்டன், கமாண்ட் சென்டர் பட்டன், ஆர்மரி கிரேட் பட்டன், 2x அசைனபில் க்ரிப் பட்டன்கள், தம்ப்ஸ்டிக்: 2x ஃபுல்-சைஸ் அனலாக் ஸ்டிக் மற்றும் கேபாசிடிவ் டச், ஹேப்டிக்ஸ்: HD ஹேப்டிக்ஸ், 6-ஆக்சிஸ் IMU வழங்கப்பட்டு இருக்கிறது.

ASUS-ROG-Ally 4

ASUS-ROG-Ally 4

புதி்ய அசுஸ் ROG Ally மாடலில் ஏஐ சார்ந்து இயங்கும் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம், ஹை-ரெஸ் சான்று, டால்பி அட்மோஸ், பில்ட்-இன் அரே மைக்ரோபோன், 2 ஸ்பீக்கர் சிஸ்டம், ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம், வைபை 6E, ப்ளூடூத் 5.2, 40 வாட் ஹவர் பேட்டரி, 65 வாட் சார்ஜர் வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் புதிய அசுஸ் ROG Ally மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜூலை 12 ஆம் தேதி அசுஸ் எக்ஸ்குளூசிவ் ஸ்டோர்கள், அசுஸ் இ-ஷாப் மற்றும் ப்ளிபாகார்ட் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது.

google news