Connect with us

job news

மாதம் ரூ.25,000 சம்பளம், இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சியில் அசத்தல் வேலை..!

Published

on

Indian Institute of Management

இந்திய மேலாண்மைக் கழகம் (Indian Institute of Management Trichy – IIM Trichy), இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று. ஜனவரி 4, 2011 அன்று தொடங்கிய ஐஐஎம் திருச்சி நாட்டின் பதினோராவது இந்திய மேலாண்மை கழகமாகும்.

இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் (Research Associate) பணிக்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

விண்ணப்பதாரர் வயது:

ஆராய்ச்சி உதவியாளர்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் தகவலுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்கவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • விண்ணப்பதாரர் கலை/அறிவியல்/வணிகம்/பொறியியல்/சட்டம் ஆகியவற்றில் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் தமிழ் படிக்க, எழுத மற்றும் பேசுவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் கருவிகள் (குறிப்பாக வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட்) நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேலே குறிப்பிட்டுள்ள தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும்.
  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட பயோ டேட்டா-வை [email protected], [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சம்பளம் மற்றும் கடைசி தேதி:

ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.  இதற்கு விண்ணப்பிப்பவர் தங்களது பயோ டேட்டா-வை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *