job news
‘NTPC’-ல் எக்ஸிகியூட்டிவ் வேலை..இன்னும் 5 நாள்தான் இருக்கு..! உடனே விண்ணப்பிங்க..!
தேசிய அனல் மின் கழகம் (NTPC) லிமிடெட் 72,364 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனமாகும் மற்றும் மின் உற்பத்தி வணிகத்தின் முழு மதிப்புச் சங்கிலியிலும் முன்னிலையில் உள்ளது.
தேசிய அனல் மின் கழகம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
NTPC லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எக்ஸிகியூட்டிவ் (LA/R&R) பணிக்கென 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
எக்ஸிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆகும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
முதுகலை பட்டம்/ பிஜி டிப்ளமோ/ எம்எஸ்டபிள்யூ அல்லது எம்பிஏ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளமான careers.ntpc.co.in இல் உள்நுழைய வேண்டும் அல்லது www.ntpc.co.in இல் உள்ள கேரியர்ஸ் பகுதியைப் பார்வையிடவும்.
- Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
- அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
- பதிவு செய்து முடித்ததும் உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/ EWS/OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும். SC/ST/PwBD/XSM பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
எக்ஸிகியூட்டிவ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.90,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை ஜூன் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.