Connect with us

automobile

வேற லெவல் என்ஜின், அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமான மெர்சிடிஸ் AMG SL55!

Published

on

Mercedes-AMG-SL-55-Featured img

மெர்சிடிஸ் AMG பிராண்டு ஒருவழியாக தனது முற்றிலும் புதிய AMG SL55 ஆடம்பர கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு கிடைக்கும் மெர்சிடிஸ் AMG SL55 மாடல் இந்தியாவுக்கு முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட வடிவில் கொண்டுவரப்பட இருக்கிறது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய AMG SL55, அதன் 7th Gen மாடல் ஆகும். இதன் SL, S-கிளாஸ் கேப்ரியோலெட் மற்றும் AMG GT ரோட்ஸ்டர் ஆகிய மாடல்களுக்கு மற்றாக அமைகிறது. புதிய SL மாடல், மெர்சிடிஸ் AMG மாடலில் மீண்டும் ‘55’ பெயரை கொண்டுவந்து இருக்கிறது. 55 பெயரில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட மெர்சிடிஸ் கார் – G55 எஸ்.யு.வி. ஆகும்.

Mercedes-AMG-SL-55-

Mercedes-AMG-SL-55-

என்ஜின் விவரங்கள்:

முற்றிலும் புதிய மெர்சிடிஸ் AMG SL55 மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 476 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

Mercedes-AMG-SL-55 2

Mercedes-AMG-SL-55 2

இதன் கியர்பாக்ஸ் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 4மேடிக் பிளஸ் சிஸ்டம் மூலம் காரின் நான்கு சக்கரங்களையும் இயக்குகிறது. புதிய மெர்சிடிஸ் AMG SL55 மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 295 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ரியர் ஆக்சில் ஸ்டீரிங் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

அளவீடுகள் :

புதிய தலைமுறை மெர்சிடிஸ் AMG SL55 ரோட்ஸ்டர் மாடல் 4705mm நீளம், 1915mm அகலம், 1359mm உயரமாக உள்ளது. இது முந்தைய மாடலை விட முறையே 88mm, 38mm மற்றும் 44mm அதிகம் ஆகும். இந்த காரின் வீல்பேஸ் 117mm அளவில் நீட்டிக்கப்பட்டு, தற்போது பின்புற இருக்கைகளை தாங்கும் வகையில், 2700mm அளவில் உள்ளது.

இதர அம்சங்கள் :

புதிய மெர்சிடிஸ் AMG SL மாடலில் அளவில் பெரிய Panameicana முன்புற கிரில், ஆங்குலர் எல்இடி ஹெட்லைட், நீண்ட பொனெட் மற்றும் இரண்டு பவர் டோம்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ரேக்டு வின்ட்-ஸ்கிரீன், குவாட் எக்சாஸ்ட், 20-இன்ச் அலாய் வீல் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. வித்தியாசமான டிசைன் விரும்புவோர், 21-இன்ச் அலாய் வீல் மற்றும் டிசைன் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

Mercedes-AMG-SL-55 3

Mercedes-AMG-SL-55 3

விசேஷமான சாஃப்ட் ரூஃப் :

4th Gen SL மாடலில் இருந்து முதல் முறையாக, புதிய SL மாடலில் ட்ரிபில்-லேயர் ஃபேப்ரிக் ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது. முந்தைய தலைமுறை மாடலில் பயன்படுத்தப்பட்ட மெட்டல் ரூஃப்-ஐ விட இதன் எடை 21 கிலோ குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனை சென்டர் கன்சோலில் உள்ள ஸ்விட்ச் அல்லது இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மூலம் இயக்க முடியும்.

இதில் உள்ள சாஃப்ட் ரூஃப் 16 நொடிகளில் திறக்கவும், மூடிக் கொள்ளும். காரை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிக் கொண்டே, இதனை இயக்க முடியும். சாஃப்ட் ரூஃப்- பிளாக், டார்க் ரெட் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் AMG SL55 மாடல்- அப்சிடியன் பிளாக், செலனைட் கிரே, ஹைப்பர் புளூ, ஆல்பைன் கிரே, ஒபலைட் வைட் பிரைட், ஸ்பெக்ட்ரல் புளூ மாங்கோ, படகோனியா ரெட் பிரைட் மற்றும் மொன்சா கிரே மாங்கோ என எட்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இன்டீரியர் அம்சங்கள்:

மெர்சிடிஸ் AMG SL55 மாடலில் 11.9 இன்ச் அளவில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டச்-ஸ்கிரீன் உள்ளது. பயனர்கள் இதனை 12 டிகிரியில் இருந்து 32 டிகிரி வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். இத்துடன் மெர்சிடிஸ் MBUX ஒ.எஸ். வழங்கப்படுகிறது. இது பிஸ்போக் AMG மற்றும் சாஃப்ட்-டாப் டிஸ்ப்ளே மோட்களை கொண்டிருக்கிறது.

Mercedes-AMG-SL-55 4

Mercedes-AMG-SL-55 4

இதன் டச் ஸ்கிரீனுடன் 12.3 இன்ச் LCD டிரைவர் டிஸ்ப்ளே உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இன்டீரியரில் இருக்கை மேற்கவர்களை பிளாக் நப்பா லெதர், மைக்ரோஃபைபர் மற்றும் ரெட் ஸ்டிட்ச், பிளாக் நப்பா லெதர், சியெனா பிரவுன் லெதர், டிரஃபில் பிரவுன் நப்பா லெதர் மற்றும் பிளாக் நப்பா லெதர், மைக்ரோஃபைபர் மற்றும் எல்லை ஸ்டிட்சிங் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் AMG SL55 மாடல் போர்ஷே 911 கரெரா S கேப்ரியோலெட் மற்றும் லெக்சஸ் LC 500h போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 கோடியே 18 லட்சம் மற்றும் ரூ. 2 கோடியே 39 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மெர்சிடிஸ் AMG SL55 மாடலின் விலை ரூ. 2 கோடியே 35 லட்சம் என்று துவங்குகிறது.

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *