latest news
ஐஒஎஸ் 17 உடன் வரும் ஐந்து பாதுகாப்பு அம்சங்கள் – இதெல்லாம் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷன் மூலம் ஐபோன்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கிறது. இதில் பெரும்பாலான அம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்தமான பிரவுசர் சஃபாரி-யில் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்டு உள்ளன. ஐபோன் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் முற்றிலும் புதிய ஐஒஎஸ் 17 தற்போது அதன் பீட்டா வெர்ஷனில் உள்ளது.
முதற்கட்டமாக ஐஒஎஸ் 17 வெர்ஷன் பீட்டா வடிவில் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்குமான அப்டேட் இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாத வாக்கில் புதிய ஒஎஸ் ஸ்டேபில் வெர்ஷனை வெளியிடுவதை ஆப்பிள் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
அந்த வகையில், புதிய ஐஒஎஸ் 17-இல் ஆப்பிள் வழங்க இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் எவை என்று தொடர்ந்து பார்ப்போம்.
கம்யூனிகேஷன் சேஃப்டி :
ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலான செயலிகளில் கம்யூனிகேஷன் சேஃப்டி (communication safety) வசதியை நீட்டிக்க இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் சட்ட விரோத புகைப்படம் அல்லது வீடியோக்களை ஏர்டிராப் அல்லது ஐமெசேஜ் மூலம் பெறாமல் இருக்க முடியும். நிர்வான புகைப்படம் அல்லது வீடியோக்களில் தானாக உள்ளாடை அணிவிக்கவும், உடலின் பிறப்பு உறுப்புகள் சென்சார் செய்யப்பட்டு விடும் என்று ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.
ஐஒஎஸ் 17, ஐபேட் ஒஎஸ் 17 மற்றும் மேக்ஒஎஸ் சொனோமாவில் புதிய கம்யூனிகேஷன் சேஃப்டி அம்சம் தானாக செயல்படுத்தப்பட்டு விடும். இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய, செட்டிங்ஸ் — ஸ்கிரீன் டைம் — கம்யூனிகேஷன் சேஃப்டி ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
ஆட்டோ டெலீட் வெரிஃபிகேஷன் கோட் :
ஒன்-டைம் பாஸ்வேர்டுகளை (ஒ.டி.பி.) தவறாக பயன்படுத்துவது பொதுவாகவே கடினமான காரியம் ஆகும். எனினும், முழுமையான பாதுகாப்பு வழங்க அவற்றை டெலீட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். எனினும், ஒ.டி.பி.-க்களை டெலிட் செய்வது சிக்கலான மற்றும் எரிச்சலான காரியம் ஆகும்.
இதற்கு முடிவு கட்டும் வகையில், ஆப்பிள் நிறுவனம் வெரிஃபிகேஷன் கோட்களை தானாக அழிந்து போக செய்யும் வசதியை வழங்குகிறது. தற்போதைய ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் இந்த அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பது அவசியம் ஆகும். இந்த அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் — பாஸ்வேர்டு — பாஸ்வேர்டு ஆப்ஷன் — கிளீன் அப் ஆட்டோமேடிக்கலி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்.
போட்டோ பிரைவசி பெர்மிஷன் :
ஐபோன் பயனர்கள் புகைப்படம் அல்லது வீடியோக்களை செயலிகள் முழுமையாகவோ அல்லது ஒருபகுதியாகவோ இயக்குவதற்கு அனுமதி வழங்க முடியும். ஐஒஎஸ் 17 மூலம், பயனர்கள் இதே அம்சத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். கூடுதலாக எந்தெந்த செயலிகளுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ரிமைன்டர் வழங்க செய்யலாம்.
இந்த அம்சத்தை செயல்படுத்தவும், நீக்குவதற்கும் எந்த வழிமுறைகளும் வழங்கப்படவில்லை. இந்த அம்சம் ஐஒஎஸ் 17-இல் தானாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
சஃபாரி பிரைவேட் பிரவுசிங் :
ஆப்பிள் சஃபாரி பிரவுசர் ‘பிரைவேட்’ பிரவுசிங் வசதியை வழங்குகிறது. இது கூகுள் க்ரோம் பிரவுசரில் உள்ள இன்காக்னிட்டோ மோட் போன்ற அம்சம் ஆகும். புதிய ஐஒஎஸ் 17-இல் பிரைவேட் பிரவுசிங்கில் உள்ள டேப்கள் தானாக லாக் செய்யப்பட்டு விடும்.
இதன் மூலம் மற்றவர்கள் பயனர் ஐபோன் பயன்படுத்தும் போது, பயனர்களுக்கு ஏற்படும் சங்கடத்தை போக்க முடியும். இந்த அம்சம் மேக் சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தை பயனர்கள் செட்டிங்ஸ் — சஃபாரி — பிரைவேட் பிரவுசிங்கை அன்லாக் செய்ய ஃபேஸ் ஐடி-ஐ செயல்படுத்தக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
சஃபாரி அட்வான்ஸ்டு டிராக்கிங் :
சஃபாரி பிரவுசரில் வழங்கப்படும் மற்றொரு பாதுகாப்பு அம்சம் அட்வான்ஸ்டு டிராக்கிங். இதை கொண்டு பயனர்கள் யு.ஆர்.எல்.-களில் உள்ள டிராக்கர்களை தவிர்க்க செய்கிறது. இந்த டிராக்கர்கள் பயனர் லொகேஷன் அல்லது சாதனத்தின் விவரங்களை அம்பலப்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.
இந்த அம்சத்தை செயல்படுத்த செட்டிங்ஸ் — அட்வான்ஸ்டு — அட்வான்ஸ்டு டிராக்கிங் அன்ட் ஃபிங்கர்-ப்ரின்ட் ப்ரோடெக்ஷன் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த செட்டிங்கை பிரைவேட் பிரவுசிங் மற்றும் ஆல் பிரவுசிங் உள்ளிட்டவைகளில் செயல்படுத்த முடியும்.