Connect with us

latest news

வரப்போகிறது ஐகூவின் நியோ 7 ப்ரோ..! மிட் ரேஞ்ச் ஃபோன்களின் விற்பனையை பாதிக்குமா..?

Published

on

iqoo neo 7 pro

ஐகூ நிறுவனம் சமீபத்தில் நியோ 7 என்ற 5g மொபைலை அறிமுகப்படுத்தியது. இது மிகப்பெரிய வெற்றிடைந்து நல்ல விற்பனையிலும் உள்ளது. ஐகூ நியோ 7 ப்ரோவை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்களும் இணையத்தில் கசிந்துள்ளது. பிரீமியம் வடிவமைப்பு மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராஸசருடன் வருகிறது.

iqoo neo 7 pro 3

iqoo neo 7 pro 3

ஐகூ நியோ 7 ப்ரோ வடிவமைப்பு :

நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு வீடியோவில் இது ஒரு 5g மொபைல் ஆக வருகிறது. மேலும் இதில் பின்பகுதியில் முழுவதுமாக லெதர் கொண்டு வருகிறது. பின்புற மூன்று கேமரா உள்ளது. மேலும் சுற்றிலும் தங்க நிறத்திலான முலாம் பூசப்பட்டுள்ளது. முன்புற தோற்றத்தில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது போல அதே பன்ச் ஹோல் கேமரா உள்ளது.

iqoo neo 7 pro 2

iqoo neo 7 pro 2

கசிந்த சிறப்பம்சங்கள் :

ஐகூ நியோ 7 ப்ரோ 6.7 இன்ச் அங்குல ஃபுல் hd+ சாம்சங் நிறுவனத்தின் e5 அமலோடு டிஸ்ப்ளே உடன் வருகிறது . மேலும் இது 120 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை பெற்றுள்ளது. மேலும் இது snapdragon 8 ஜென் ஒன் சிப்சட்டை கொண்டுள்ளது. இது உயரிய ரக போன்களில் வரும் ப்ராஸசருடன் வருகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் அதிவேகத்தை வழங்கக்கூடிய ப்ராஸசராக உள்ளது. இதன் காரணமாக விலையும் அதிகரிக்ககூடும். மேலும் அடுத்ததாக வரவுள்ள நத்திங் போன் 2 வில் இதே பிராசஸர் பயன்படுத்தப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 சேமிப்புடன் வகைகளில் கிடைக்கிறது.

மேலும் இதில் 50 எம்பி காண பின்புற கேமரா உள்ளது. இதில் சாம்சங் நிறுவனத்தின் ஜி.என்5 உடன் ஓஐஎஸ்( ois) தொழில்நுட்பத்துடனும் வருகிறது. மேலும் 5000mah பேட்டரியுடன் இதை வேகமாக சார்ஜ் செய்ய 120w அதிவேக சார்ஜர் உடன் வழங்கப்படுகிறது. மீதமுள்ள சிறப்பம்சங்கள் மொபைல் வெளியாகும் அன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது.

iqoo neo 7 pro 4

iqoo neo 7 pro 4

ஐகூ நியோ 7 ப்ரோ விலை :

இந்த ஐகூ நியோ 7 ப்ரோ வின் விலை 40,000 ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இதில் பயன்படுத்தப்படும் snapdragon 8ஜென்1 ப்ராஸசர் காரணமாக இந்த விலை ஏற்றம் இருக்கும். முன்னதாக ஐகூ நியோ 7 ப்ரோ 30,000 ரூபாயில் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நியோ 7 ப்ரோ மொபைலில் அதன் ப்ராஸசர் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் கூடி வருவதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும். மேலும் இது ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் இந்த மொபைல் வாங்க கிடைக்கும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *