latest news
உங்கள் ஜிமெயிலில் விளம்பர செய்திகளை மொத்தமாக நீக்க வேண்டுமா?..இதோ எளிய வழிகள்..
கூகுல் அக்கெளண்டில் ஒரு ஐடி-க்கு இலவசமாக ஒதுக்கபடுவது 15 ஜீபி மட்டும்தான். அதை தாண்டும்பொழுது கூடுதல் பதிவிற்காக உங்களது இ-மெயில்களை நீக்கவோ அல்லது கூடுதல் தகவல்களுக்காக நாம் கூகுள் ஒன் சந்தாவையோ வாங்க வேண்டிய நிலை வரலாம். இவ்வாறான ஸ்டேரேஜ்களை திரும்ப பெறுவதற்கு நாம் நமது பெயில் வரும் தேவையில்லாத செய்திகளை நீக்குவது அவசியம். மேலும் இந்த மாதிரியான விளம்பர செய்திகள் நமது மெயிலில் பெரும்பாலனா ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களை ஆக்கிரமிக்கும். இந்த மாதிரியான தெவை இல்லாத மெயில்களை எவ்வாறு மொத்தமாக நீக்குவது என்பதை காணலாம். இதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.
- முதலில் ஜிமெயிலை திறந்து பின் அதன் இடதுபுறம் உள்ள Catogories என்ற பட்டனை அழுத்தவும்.
- அப்போது அதில் Promotion என்ற Option-ஐ கிளிக் செய்யவும்.
- பின் அந்த பக்கத்தில் மேல்புறம் உள்ள Select என்ற Checkbox-ஐ அழுத்தவும். அவ்வாறு அழுத்தும் பொழுது நமது மொத்த விளம்பர மெயில்களும்– ஆகியிருப்பதை காணலாம்.
- இப்போது Delete என்ற பட்டனை அழுத்தவும்.
- நமது மெயில்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த செய்திகள் அனைத்தும் அழிய சில நேரம் ஆகும்.
- இதோ சில நொடிகளில் நமக்கு தேவையில்லாத மெயில்களை நீக்கிவிட்டோம்.
இந்த முறையில் உள்ள பிரச்சனை என்னவென்றால் சில சமயம் நமக்கு தேவையுள்ள மெயில்கள் இந்த கேட்டகிரியில் வந்து சேரும். நாம் இதனை நீக்கும் பொழுது அதுவும் சேர்ந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே இந்த மாதிரியான செயலை செய்வதற்கு முன் நமக்கு தேவையுள்ள மெயில்களை நாம் ஸ்டார் பகுதியில் சேமிப்பது நல்லது.