Connect with us

job news

மாதம் ரூ.20,000 சம்பளம்…தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை…மிஸ் பண்ணமா விண்ணப்பீங்க.!!

Published

on

nit trichy recruitment 2023

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி, ( NIT Trichy) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இந்நிலையில், இந்த NIT Trichy நிறுவனம் புதியதாக வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பதவியின் பெயர் காலியிடங்கள்

பணியின் பெயர் ஆராய்ச்சி உதவியாளர் – 1 காலியிடம் உள்ளது

தகுதி

இந்த பணியில் சேரவேண்டும் என்றால் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழத்தில்  M.E./M.Tech/MS முடித்திருக்கவேண்டும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு 

இந்த ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது கட்டாயம் 27 ஆக இருக்கவேண்டும்.

வேலை விவரம்

  • மின்சாரத்திற்கான உட்பொதிக்கப்பட்ட அமைப்புகளின் ஆய்வு மற்றும் வடிவமைப்பு
    இயந்திரங்கள்.
  • திட்டத்திற்கான உபகரணங்கள் மற்றும் சரக்குகளை வாங்குதல்.
  • நிகழ்நேர உட்பொதிக்கப்பட்ட அமைப்பு மற்றும் சோதனையை செயல்படுத்துதல்

சம்பளம் எவ்வளவு..? 

மேற்கண்ட இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு மாதம் 20,000 வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறை..

இந்த ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து கீழே அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி –

Dr. S. Moorthi, Associate Professor/ EEE in
National Institute of Technology, Tiruchirappalli-15, Tamil Nadu.

மேலும். இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பற்றி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்காணல் திருச்சிராப்பள்ளியில் இருக்கும் நேர்காணலின் போது தேர்வர்கள் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும்.. நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *