Connect with us

latest news

விவோ y36 போன் அறிமுகம்..! 50mp கேமராவுடன் சிறந்த பட்ஜெட் போனாக விளங்குமா..?

Published

on

vivo y 36

விவோ இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற போன்‌ ஆகும் . அதன் கேமரா மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். yசீரியஸ் பொறுத்த வரையில் பட்ஜெட் விலையில் சிறந்த ஃபோன்களை விவோ வெளியிடும். தற்பொழுது விவோ வின் y36 மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கைகளில் மிக எளிதாக பிடிக்கக் கூடிய வகையில் மெல்லிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இதனுடன் ஸ்னாப்டிராகன் 680 ப்ராசசர் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 8gb வரை ரேமை அதிகரித்து கொள்ள முடியும். 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதை 44 வார்ட் அதிவேக சார்ஜர் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். Y36 நுகர்வோருக்கு தடையற்ற பணி செயலாக்கத்தையும், தடையற்ற பயனர் அனுபவத்தையும் வழங்குகிறது.

vivo y 36 3

vivo y 36 3

வடிவமைப்பு :

2.5 டி அளவில் கர்வ் டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனுக்கு பிரீமியம் தருகிறது.
பின்பக்கத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் ரிங் வடிவ கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இதில் சூரிய ஒளி படும்பொழுது வானவில் கலரை பிரதிபலிக்கிறது. பக்கவாட்டில் வேகமாக இயங்கக்கூடிய கைரேகை சென்சார் உள்ளது.

6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது தெளிவான வண்ணங்களை வழங்குகிறது மற்றும் அதிவேகமான பார்வை அனுபவத்தை வழங்குகிறது. 90Hz புதுப்பிப்பு வீதம், 240Hz தொடு மாதிரி வீதம் மற்றும் 16.7 மில்லியன் வண்ணங்களுடன் திரை சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. அதிக சூரிய ஒளியிலும் தெளிவாகத் தெரியக்கூடிய தாக உள்ளது.

vivo y 36 2

vivo y 36 2

புதிய vivo Y36 ஆனது அதன் இரட்டை கேமரா அமைப்புடன் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை உருவாக்க முடிகிறது. 50MP போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 2MP பொக்கே கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புகைப்படம் எடுக்கும் போது பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்குமாறு பல சிறப்பம்சங்களுடன் விவோ கொண்டுள்ளது. முன்பக்க மாக 16 எம் பி கேமராவை கொண்டுள்ளது. இதைக் கொண்டு இரவு நேரத்திலும் புகைப்படம் தெளிவாகவும் அழகாகவும் எடுக்க முடியும். மேலும் பல வித சிறப்பம்சங்களாக சூப்பர் நைட் மோட், மல்டி ஸ்டைல் போர்ட் ரேட் போன்ற வகைகளை கொண்டுள்ளது.

 

vivo Y36 ஆனது சினிமாடிக் ஆஸ்பெக்ட் ரேஷியோ எனப்படும் அல்ட்ரா-வைட் ஃபிலிம் ஃபார்மேட்டுடன் வருகிறது. இது வாடிக்கையாளர்கள் திரைப்படம் போன்ற வீடியோக்களை படம்பிடிக்க உதவுகிறது. மென்மையான செயல்திறன் கொண்ட பயனர் அனுபவத்தை அளிக்கிறது. vivo Y36 ஆனது ஸ்னாப்டிராகன் 680 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 6nm சிப்செட் 2.4 GHz வரை இயங்குகிறது. மென்மையான மற்றும் நீடித்த செயல்திறனுக்காக சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும்

vivo y 36 4

vivo y 36 4

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட FunTouch OS 13 இல் இயங்குகிறது. FunTouch OS 13 ஆனது vivoவின் வடிவமைப்பை சார்ந்த இது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட விருப்பங்கள், தனியுரிமை மற்றும் பாதுகாப்புடன் வருகிறது. இதன் விலை சுமார் 17000 முதல் விவோ ஷோரும் அங்கீகரிக்கப்பட்ட கடை மற்றும் ஆன்லைனில் கிடைக்க பெறுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *