Connect with us

job news

BECIL வேலைவாய்ப்பு…மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்…நழுவவிடமால் அப்ளை மக்களே.!!

Published

on

becil recruitment 2023

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL ) E – Tendering Professional மற்றும் Finance Facilitation Professional பதவிகளுக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  (BECIL ) என்பது இந்திய அரசின் மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் சான்றிதழ் பெற்ற மினி ரத்னா நிறுவனம் மேலும், இது வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு பொறியியலையும் உள்ளடக்கியுள்ளது.  இந்நிலையில், BECIL  தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,  மேற்கண்ட பதவிகளுக்கு மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மேற்கண்ட இந்த E – Tendering Professional மற்றும் Finance Facilitation Professional பதவிகளுக்கு உங்களுக்கு வேலைக்கு சேர ஆர்வமும், விருப்பமும் இருந்தால் நீங்கள் விண்ணப்பம் செய்ய  58 முதல் 65 வயது கொண்டவராக இருக்க வேண்டும்.

அனுபவம்

E – Tendering Professional – பதவிக்கு 

  • இந்த பதவியில் வேலைக்கு சேர விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரருக்கு கொள்முதல்/டெண்டர்களில் அதாவது (procurement/participation in tenders)பங்கேற்பதில் குறைந்தபட்சம் 5 வருட தகுதி மற்றும் அனுபவம் கட்டாயமாக இருக்க வேண்டும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஆய்வு செய்தல், ஏல ஆவணங்களை தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் விண்ணப்பதாரர் மின் கொள்முதல் துறையில் குறைந்தபட்ச சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Finance Facilitation Professional – பதவிக்கு 

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் தகுதி பணி அனுபவம் உள்ள வங்கி(கள்)/ NBFCகளில் முன்னேற்றங்கள்/கடன் துறை மற்றும் சிறந்த அறிவை கொண்டிருக்க வேண்டும்.

கல்வி தகுதி 

  • இந்த Finance Facilitation Professional – பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA/ ICWA/ B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அதைப்போலவே போலவே  Tendering Professional – பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech. OR MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

மேற்கண்ட இந்த இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு  ரூ.50,000 சம்பளமாக வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுசெய்யப்படும் முறை 

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் / நேர்காணல்கள் / தொடர்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலையில் சேர நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால், அவர்கள் யாரெல்லாம் என அறிவிக்கப்பட்ட பிறகு அதில் குறிப்பிடப்பட்டுள்ள  விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது..? 

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.becil.com/vacancies  க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  அனைத்து தொடர்புடைய ஆவணங்களுடன் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BECIL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கடைசி தேதி  அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 12 ஜூலை 2023 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் –https://www.becil.com/vacancies

Download Official Notification – link 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *