job news
ஐஐடி மெட்ராஸ்-ல் மூத்த திட்டப் பொறியாளர் வேலை..! பி.இ, பி.டெக் முடித்திருந்தால் போதும்..! இப்போவே அப்ளை பண்ணுங்க..
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (Chennai Indian Institute of Technology – IIT Madras), தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும்.
ஐஐடி மெட்ராஸ் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
ஐஐடி மெட்ராஸ் விண்வெளிப் பொறியியல் துறையில் காலியாக உள்ள மூத்த திட்டப் பொறியாளர் (Senior Project Engineer) பணியை தற்காலிக முறையில் நிரப்ப உள்ளது. இதற்கு 2 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
மூத்த திட்டப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறித்த தகவல் அறிவிப்பில் கொடுக்கப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு தொடர்புடைய துறைகளில் 2வ வருட அனுபத்துடன் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ஒரே பதவிக்கு இரண்டு முறை விண்ணப்பிக்க முயற்சிக்கக் கூடாது.
- ஒரே பதவிக்கான விண்ணப்பதாரரிடம் இருந்து பல விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் சரியான மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளை ஆன்லைன் விண்ணப்பத்தில் நிரப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் அனைத்து கடிதங்களும் நிறுவனத்தால் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.
- விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி மூத்த திட்டப் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்.
- நேர்காணலுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.
சம்பள விவரம்:
மூத்த திட்டப் பொறியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
இந்த பதவியில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை ஜூலை 13ம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/ அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.